பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்
இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருந்தாலும் ஒரு சில ஊர்களில் பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது, இல்லையென்றால் வயதானவர்கள் வீட்டில் இருப்பார்கள் அவர்களை பார்த்து கொள்வதற்காக வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில் ஏதும் இருந்தால் செய் என்று சொல்வார்கள். ஆனால் வீட்டிலிருந்து என்ன தொழில் செய்வது, அப்படியே செய்தாலும் அதிலிருந்து வருமானம் நல்லா ஈட்ட முடியுமா என்ற பல கேள்விகள் இருக்கும். அதனால் இந்த பதிவில் பெண்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில்கள் பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு என்ன தொழில் ஏற்றவையாக இருக்கிறதோ அதை செய்து வாழ்க்கையில் வெற்றியை அடையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Baby Care Home Service:
குழந்தைகள் மற்றும் முதியோர்களை பார்த்து கொள்ளும் தொழில் வெளிநாட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நம் நாட்டில் குறைந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் வருகின்ற காலத்தில் Demand அதிகமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கணவன்,மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை பார்த்து கொள்ள ஒரு வேலை ஆளை தேடுகிறார்கள். அதனால் அவர்களின் வீட்டில் சென்று பார்த்து கொள்ளலாம். இல்லையென்றால் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றும் பார்த்து கொள்ளலாம். இதற்கு நேரத்தை பொறுத்து ஊதியம் வழங்கப்படும்.
படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லையா.!
Accounting Business Plan:
நிறைய கம்பெனிகளில் Accountant இருக்க மாட்டார்கள். அதனால் அந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்தே கணக்கு பார்ப்பவரை தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அந்த கம்பெனிகளுக்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு நாளும் நடந்த வரவு, செலவை பார்த்து கொடுக்கலாம்.
கல்வி கற்பித்தல்:
கல்வி என்பது அழியாத ஒன்றாகும். முன்னடியெல்லாம் படிக்காத குழந்தைகள் Tuition செல்வார்கள். இப்போது அப்படியில்லை எல்லாருமே Tuition செல்கிறார்கள். நீங்கள் எல்லா பாடத்திலும் சிறந்து விளங்குவீர்கள் என்றால் எல்லா பாடத்தையும் எடுக்கலாம். இல்லையென்றால் இந்த பாடத்தில் சிறந்து விளங்குவேன் என்றால் அந்த பாடத்தை மட்டும் எடுக்கலாம். இதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டும் எடுத்தால் மட்டும் பொது. நீங்கள் எடுக்கும் பாடம் மற்றும் வகுப்பை பொறுத்து வருமானத்தை ஈட்டி கொள்ளாலாம்.
உங்க கையில் 1000 ரூபாய் இருந்தாலே போதும் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |