Pengal Veetil Seiyum Tholil
நம் முன்னோர்களின் காலத்தில் ஆண்கள் மட்டும் தான் வேலைக்கு சென்றார்கள். பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை மட்டும் தான் பார்த்தார்கள், மேலும் பெண்களை அதிகமாகவும் படிக்க வைக்கவில்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாருமே படிக்கின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் கிராமங்கள் மற்றும் சில வீடுகளில் பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டிக்கிறார்கள். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு வேலை செல்கின்ற பெண்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது. இவர்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில் ஏதும் இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் நீங்கள் பிரீயா இருக்கும் நேரத்தில் செய்ய கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தினமும் 3000 ரூபாய் சம்பாதிக்க:
பெண்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழிலாகவும் என்றும் அழியாத தொழிலாகவும் இருக்க கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதவாது இந்த பூ தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள், முதலீடு போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
இந்த தொழிலை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம்.
பூவை மட்டும் கட்டி கொடுக்கலாம் (அல்லது)
நீங்களே பூவை வாங்கி உதிரியாகவும் விற்கலாம் ( அல்லது) கட்டியும் விற்கலாம்.
வீட்டிலிருந்து உட்கார்ந்து கொண்டே 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. உடனே இந்த தொழிலை செய்யுங்க..
இடம்:
நீங்கள் பூவை மட்டும் கொடுக்க போகிறீர்கள் என்றால் இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை, உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதுமானது.
அதுவே பூவை விற்க போகிறீர்கள் என்றால் தனியாக இடம் தேவைப்படும், அதுவும் மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக இருக்க வேண்டும்.
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பூ மட்டும் தான் தேவைப்படும். நீங்கள் பூவை மட்டும் கட்டி கொடுக்க போகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு ரூபாய் கூட முதலீடாக தேவைப்படாது. அதுவே பூ விற்கும் தொழில் என்றால் முதலீடாக 3000 ரூபாய் தேவைப்படும். இதற்கு ஒரு தள்ளுவண்டி, பூ மூலப்பொருட்களாக தேவைப்படும்.
வருமானம்:
பூக்களை வாங்கி அவற்றை கட்டி கொடுப்பதற்கு தனியாக ஆட்களை தேடுவார்கள். அவர்களிடம் நீங்கள் பூக்களை கட்டி கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அவர்கள் பூக்களை கட்டி கொடுப்பதற்கு குறிப்பிட்ட தொகையை வருமானமாக கொடுப்பார்கள். தோராயமாக நீங்கள் ஒரு கிலோ பூ கட்டி கொடுக்கிறீர்கள் என்றால் அதற்கு 100 வருமானமாக கொடுப்பார்கள். அப்போ நீங்கள் 10 கிலோ பூவை கட்டி கொடுக்கிறார்கள் என்றால் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |