Evergreen Business
நாம் அனைவருக்கும் சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்து கொண்டுதான் இருக்கு. நாம் ஒரு தொழில் முனைவோராக வியாபாரியாக முதலாளியாக என பல்வேறு பரிமாணங்களை அடைய எண்ணுவோம். அதற்கு நாம் முதல் படியாக நமக்கான தொழிலை அறிந்து இருக்க வேண்டும். நாம் செய்யும் தொழிலுக்கு சந்தையில் உள்ள வாய்ப்பு, அந்த தொழில் நமக்கு எந்த விதத்தில் முன்னேற்றம் தரும் அதனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பல உள்ளது. அதனை தொடங்கும் போது பல சறுக்கல்கள் ஏற்படும். ஆனால் அவற்றில் இருந்து நம்மை மீட்டுஎடுத்து சாதிக்க நமக்கு அந்த தொழிலை பற்றிய ஒரு புரிதல் இருக்க வேண்டும். இந்தியாவில் அழகு சாதன வணிகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் இயற்கையாக தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், முக அழகுசாதன பொருட்கள் பெரும் வரவேற்பு உள்ளது. நீங்கள் இதை சார்ந்த தொழில் தொடங்க எண்ணினால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும். வாருங்கள் பதிவிற்கு செல்லாம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
மக்கள் அழகை மேம்படுத்த பலவிதமான அழகு சாதன பொருட்கள் அதிகம் சந்தையில் இருந்தாலும், வேதி பொருட்கள் அற்ற அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அப்படி ஒரு தொழில் தான்
என்ன என்ன தேவைப்படும்:
எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் மூல பொருட்களை சரியான இடத்தில் இருந்து வாங்கி சேமிக்க வேண்டும். மூல பொருட்கள் குறைந்த விலையில் தரமானதாக எங்கு கிடைக்கின்றது என்பதை ஆராய வேண்டும்.
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்களை சரியான தரத்தில் வாங்க வேண்டும்.
பின்னர் தயாரித்தவற்றை சரியான முறையில் பாட்டில்களில் அடைந்து சேமிக்க வேண்டும்.
முதலீடு:
மூலப்பொருட்களை நீங்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இது உங்களுக்கு மலிவான விலையில் கிடைப்பதோடு உங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.
சிறிய அளவில் தொடங்கும் போது நீங்கள் வாங்கும் மூல பொருட்களின் விலை அதிகப்பட்சம் 5000 வரை இருக்கும்.
எண்ணெய் தயாரிக்க தேவையான பாத்திரங்கள் வடிகட்டிகள் போன்றவை உங்களிடம் உள்ளதை பயன்படுத்தலாம் அல்லது புதியதாக வாங்கிக்கொள்ளலாம். இதற்கான விலை 2000 முதல் 4000 வரை இருக்கும்.
தயாரித்தவற்றை பாதுகாக்க கண்ணாடி பாட்டில்கள் சிறந்தது. நீங்கள் விற்க ஏற்ற அளவில் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தலாம்.
அவற்றின் விலை அதிகபட்சம் 2000 வரை இருக்கும்.
சந்தைப்படுத்தும் முறை:
இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் நீங்கள் உங்கள் பொருட்களை சோசியல் மீடியாக்கள் போன்ற தளத்தில் விற்கலாம். அதனை விளம்பரப்படுத்தலாம். அது மட்டும் அல்லாமல் அருகில் உள்ள அழகு சாதன நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் இவற்றை நீங்கள் காட்சிப்படுத்தலாம்.
லாபம்:
இந்த தொழில் இந்தியாவை பொறுத்தவரை நல்ல லாபத்தை தரக்கூடியது. உங்கள் எண்ணெயின் தரம் மக்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் மாத வருமானம் ரூபாய் 10,000 முதல் 50,000 வரை பெறலாம்.
உங்கள் பொருளின் தரம் சிறந்ததாகவும், எந்த ஒரு பின்விளைவுகள் அற்றதாகவும் இருந்தால் மிக விரைவாகவே சந்தையில் உங்கள் பொருளுக்கு சிறந்த இடம் கிடைக்கும்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொழிலை இப்போதே தொடங்குங்கள்…..
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














