தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புள்ள இந்த Business ஆரம்பிங்க…மக்கள் கூட்டம் குடுங்க..

Advertisement

Low investment business idea

பெரும்பான மக்கள் இப்போது சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளனர். சம்பளத்திற்கு வேலைபார்ப்பதைவிட தங்களே சுயமாக சம்பாதிக்க துடிக்கும் தலைமுறையினர் இன்றைய தலைமுறையினர். சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட் போட்டு அல்லாடுவதைவிட, சொந்தமாக ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்றும், புதிய யுத்திகளை செயல்படுத்தி ஒரு புதிய பாதையை உருவாக்கலாம் என்றும் என்னும் பலர் இருக்கின்றனர். என்னதான் தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும், அந்த நேரத்தில் தடையாக இருப்பது முதலீடுகள் தான். நாம் செய்யும் தொழில் லாபமிக்கதாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான முதலீடும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு தொழிலை தான் மக்கள் தேடுகின்றனர். அப்படி குறைவான முதலீட்டில்  தொழில் தொடங்க எண்ணுபவருக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்வது:

குறைந்த முதலீடு கொண்ட தொழில்:

இன்றைய காலகட்டத்தில் மக்கள் துரிதமாக செயல்பட வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் உணவுகளுக்காக அதிகம் நேரம் செலவிட முடியவில்லை. ஆகையால் பெரும்பாலோனோர் ஆரோக்கியமான மற்றும் விருப்பமான உணவுகளுக்கு உணவகங்களை நாடுகின்றனர்.

அந்தவகையில், மக்கள் விரும்பும் உணவுகளில் சூப் முக்கியமானதாக உள்ளது. ஆரோக்கியமான சுவையான சூப் சாப்பிட மக்கள் சிறந்த உணவகங்களை நாடுகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் சூப் கடை திறப்பது ஒரு சிறந்த தொழிலாக இருக்கும். சந்தையில் சூப் கடைக்கு நல்ல வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான சூப் வகைகள்:

low investment business

மக்கள் பல விதமான சூப் வகைகளை விரும்புகின்றனர். சைவ மற்றும் அசைவ வகைகளில் சூப்களை தேடுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதுபோல் சத்தான உணவுகளும் முக்கியம். அதாவது மக்கள் அதிகமாக காலை மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்யும் இடங்களில் ஆரோக்கியமான சூப்பை விற்பனை செய்தல் நல்ல வருமானம் கிடைக்கும்.

முதலீடு:

ஒரு சூப் கடை தொடங்க அதிகபட்சம் ரூபாய் 15,000 தேவைப்படும். சூப் தயார்செய்வதற்கான இடம் உங்கள் வீடாக இருந்தால் உங்களில் செலவு குறையும். நீங்கள் மக்கள் இருக்கும் இடத்திலே சூப் தயாரித்தல் அதற்காக பொருட்கள், வண்டி, சமையல் செய்வதற்கான மூலப்பொருட்கள் என அனைத்திற்கும் 15,000 ஆகும்.

தின பயன்பாட்டிற்கான காய்கள் மற்றும் மசாலாக்களை வாங்குவதற்கு உங்களுக்கு சிறிய அளவிலான முதலீடு தேவைப்படும்.

மசாலாக்களை நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம் அல்லது மொத்தமாக வாங்குவதன் மூலம் செலவுகளை குறைக்கலாம். அதை போல் காய்கறிகளை அருகில் சந்தையிலோ அல்லது உங்க வீட்டு தோட்டத்திலோ பயிரிடலாம். இதன் மூலமும் செலவுகள் குறைக்கலாம்.

நீங்கள் தயாரிக்கும் சூப்களை தரம் பிரித்து விலையை நிர்ணயம் செய்யலாம். அதன் மூலம் உங்கள் வருவாய் அதிகரிக்கும். ஒரு கப் சூப் ரூபாய் 25 முதல் 30 வரை விற்கலாம். பார்சல் என்றால் கூடுதலாக ரூபாய் 5 உயர்த்தி விற்பனை செய்யலாம்.

நீங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் இரு வேறு இடத்தில் நீங்கள் கடை வைப்பதன் மூலம் உங்களின் மாத வருமான 35,000 வரை பெறலாம். தின செலவுகள் போக உங்களுக்கு மாதம் 20,000 வரை வருவாய் கிடைக்கும்.

குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் தரக்கூடிய EverGreen Business……

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement