Low Investment Ever Green Business
காலங்கள் மாற மாற அதற்கேற்றவாறு நாம் பயன்படுத்தும் பொருட்களும் மாறிவருகின்றன. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அன்றாட தேவைகளுக்கே சரியாக இருக்கிறது. பிறகு எப்படி எதிர்கால தேவைக்காக சம்பாதிக்க முடியும். அதற்கு ஒரே வழி சுயமாக ஒரு தொழில் செய்வதுதான். சுயதொழில் செய்வதற்கு முன், இக்காலத்தில் எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அந்த தொழிலாக பார்த்து செய்ய வேண்டும். அப்பொழுதான் சுயதொழிலில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். எனவே, அப்படி மக்கள் அன்றாடம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இந்த தொழில் உங்களுக்கு அதிக வருமானத்தை பெற்று தரும். அத்தகைய தொழிலை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
காகித ஸ்ட்ராக்கள் உற்பத்தி:
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித ஸ்ட்ராக்கள் சமீபத்திய ஆண்டுகளாக பிரபலமடைந்துள்ளன. காகித ஸ்ட்ராக்களை உருவாக்கி நீங்கள் விற்க எண்ணினால் கண்டிப்பாக இன்றைய சூழலுக்கு ஏற்ற தொழிலாக இந்த காகித ஸ்ட்ராக்கள் விற்பனை தொழில் இருக்கும்.
சந்தை ஆராய்ச்சி:
தொழிலையும் தொடங்குவதற்கு முன், உங்கள் பகுதியில் இந்த தொழிலுக்கான வரவேற்பு எப்படி உள்ளது உங்களுக்கு போட்டியாளர்கள் உள்ளனரா ? உங்கள் தொழிலை தொடங்குவதற்கான மூலப்பொருட்கள் எவ்வாறு பெறுவது அதற்கான விலை என்ன ? உங்களில் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை தளங்கள் உள்ளனவா. என்பதனை முதலில் ஆராய வேண்டும்.
காகித ஸ்ட்ராக்கள் உற்பத்தி தொழிலை எவ்வாறு தொடங்குவது?
தேவையான மூலப்பொருட்கள்:
1. காகித ஸ்ட்ராக்கள் தயாரிக்கும் இயந்திரம்
2. காகிதம்
3. கட்டிங் மெஷின்
4. மேலும், நிறங்கள்
5. பேக்கிங் மெஷின்
காகித ஸ்டிரா தொழிலுக்கான முதலீடு:
இந்த தொழிலை நீங்கள் தொடங்க நினைத்தால் அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். உங்களின் தேவைக்கு ஏற்ப மூலப்பொருட்களின் செலவை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆனால் இயந்திரங்களில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால் பலவருடங்கள் உங்களுக்கு வருமானத்தை பெற்றுத்தரும்.
காகித ஸ்டிரா சந்தை வாய்ப்பு:
காகித ஸ்டிரா குளிர்பானக்கடைகள், இளநீர் கடைகள், பலசரக்கு கடைகள், ஜூஸ் கடைகளில் என இவற்றின் தேவை அதிகரித்து கொண்டே உள்ளது.
வளர்ந்துவரும் குளிர்பானங்களால் காகித ஸ்டிரா தேவைகளும் அதிகரிக்கும்.
காகித ஸ்டிரா வருமானம்:
காகித ஸ்டிரா உற்பத்தியில், ஒருவர் மாதம் அதிகபட்சமாக ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.
வீட்டில் இருந்த படியே zero investment-ல் மாதம் 15,000 வரை சம்பாதிக்கலாம்….
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |