லாபகரமான தொழில்
நம் அனைவருக்கும் வாழ்வில் முன்னேற வேண்டும். முதலாளியாக வேண்டும் போன்ற கனவுகள் இருக்கும். கனவுகள் கனவுலக மட்டும் இருந்துவிடாமல் அடுத்த கட்டத்தை அடைய முக்கியமானது முயற்சி. அந்த வகையில் நீங்கள், வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான இந்த பதிவு கண்டிப்பாக உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பி சாப்பிடுகின்ற சாக்லேட்டுகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து விற்பனை செய்யலாம். உங்கள் வீட்டு சமையலறையே இதற்கு போதுமானது. வாருங்கள் இந்த தொழிலை எப்படி செய்வது, இதற்கு என்ன என்ன தேவை ஈஸியான முறையில் எப்படி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
சாக்லேட் தயாரிப்பு:
சாக்லேட் தயாரிப்பை எளிய முறையில், குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கலாம்.
சாக்லேட் தயாரிப்பு என்றென்றும் வளரும் ஒரு தொழில் அனைத்து காலங்களிலும் அனைத்துவிதமான மக்களும் விரும்பி வாங்க கூடிய ஒரு பொருளாக சாக்லேட் இருக்கும்.
சாக்லேட் தயாரிப்பு அதிக அளவில் முதலீடு தேவையில்லை. ஆனால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை நாம் சரியாக கையாண்டால், எதிர்காலத்தில் மிகச்சிறந்த வியாபாரமாக சாக்லேட் தயாரிப்புத்தொழில் இருக்கும்.
இடவசதி:
சாக்லேட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பெரிய அளவில் முதலீடு தேவையில்லை,வீட்டு சமையலறை போதுமானது.
தேவையான பொருட்கள்:
சாக்லேட் தயாரிப்பு மூலப்பொருட்களை தவிர, பாத்திரங்கள், சாக்லேட் வடிவமைப்பிற்கான மோல்டுகள், பேக்கிங் பேப்பர் போன்றவை தேவைப்படும். இவற்றின் விலை ரூபாய் 1000 முதல் 3000குள் இருக்கும்.
சாக்லேட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள்:
- டார்க் சாக்லேட்
- பார் மில்க் சாக்லேட்
- முந்திரிப்பருப்பு
- திராட்சை பழம்
- பாதாம் பருப்பு
- உலர் பழம் வகைகள்
அதிகபட்சமாக இந்த சாக்லெட்டிற்கான மூலப்பொருட்கள் விலை ரூபாய் 3000 முதல் 5000 குள் இருக்கும். மூலப்பொருட்களை நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.
வருமானம்:
இது மிகவும் லாபகரமான தொழிலாக இருக்கும். சிறிய அளவில் தொடங்கினாலும் மாதத்திற்கு 50,000 வரை வருமானம் பார்க்கலாம்.
சந்தை வாய்ப்பு:
பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் சாக்லேட்களை எளிதாக விற்கலாம்.
உள்ளூர் பகுதிகளில் அதிக சந்தை வாய்ப்பு உள்ளது.
உங்கள் தயாரிப்பு சுத்தமானதாகவும் தரமானதாகவும் இருந்தால் உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும். உணவு பொருட்களின் தரத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் சாதிக்க முடியாது.
குழந்தைகள் விரும்பும் இதனை தயாரித்து விற்பதால் எப்போதும் Profit மட்டும் தான்….
எல்லாருக்கும் பிடிச்ச இந்த தொழிலை ஆரம்பிங்க, அப்பறம் உங்க Level-லே வேற தான் …
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |