வேண்டாம் என்று ஒதுக்கும் பொருளை கொண்டு கைநிறைய சம்பாதிக்கலாம் 

Advertisement

என்றும் வருமானம் தரும் தொழில்

நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஆசை தான் சொந்த தொழில். சொந்த தொழில் என்றால் நமது கனவுகளை அதில் புகுத்தி வெற்றிபெறலாம். ஆண் பெண் இருபாலருக்கும் சுயதொழில் ஆசை இருக்கும். ஆண்கள் வெளிஉலகத்தில் தனக்கான சுய தொழிலை தேடலாம். பெண்களும் தனக்கான தொழிலை இந்த சமூகத்தில் தேடுவார்கள். ஆனால் குடும்பம் என்னும் போது சிறு தளர்வுகள் ஏற்படும்.  பெண்களுக்கு இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய சம்பாத்தியம்.

ஆனால் உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா, உங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்வதால் ஓய்வு எடுக்கவே நேரம் இல்லையா. இதற்கெல்லாம் தீர்வாக தான் இந்த பதிவு, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்தால் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளலாம் நீங்கள் சுயமாக சம்பாரித்த மாதிரியும் இருக்கும். அதற்கு ஏற்ற தொழில் தான் இது . வாருங்கள் அப்படி என்ன தொழில் இது. எப்படி இந்த தொழிலை தொடங்கலாம். இதில் உள்ள வாய்ப்புகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

என்றும் அழியாத தொழில்:

கிராமத்தில் வேண்டாம் என்று தூக்கி எரியும் பல பொருட்கள் நகரங்களில் வெளிநாடுகளில் மக்கள் அதிகம் பணம் கொடுத்து வாங்குகின்றனர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  அந்த பொருட்கள் நமக்கு பெரிதாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதற்கான தேவை சந்தையில் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக கிராமங்களில் உள்ள மாட்டு சாணம் முதல் வேப்பங்குச்சி வரை அமேசான் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்கப்படுகிறது.

இப்படி மக்களுக்கு தேவைப்படும்ஒரு பொருள் தான் முருங்கைக்கீரை பொடி. முருங்கை மரம் கிராமங்களில் வீட்டுக்கு ஒன்று இருக்கும். அதன் பயன் நமக்கு தெரிந்தாலும் அதனை தொழிலாக செய்யும் அளவிற்கு உள்ளதா என்பது தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இப்போது தெரிந்துகொள்வோம் இந்த முருங்கை கீரை பொடிகள் உலக அளவில் அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது. அதனை முறையாக தயாரித்து விற்றால் கண்டிப்பாக நல்ல வருமானம் பெறலாம்.

உள்ளூரில் இவற்றிற்கான தேவைகள் குறைவாக இருக்கலாம். ஆனால் இதனை நீங்கள் ஏற்றுமதி செய்யும் போது கண்டிப்பாக நல்ல வருவாய் வரும் தொழிலாக இருக்கும்.

எப்போதுமே மதிப்பு கூட்டு பொருளுக்கு சந்தையில் வரவேற்பு அதிகம். முருங்கை கீரைகள் மட்டும் அல்லது கிராமங்களில் கிடைக்கும் பிரண்டை, கற்றாழை, வேம்பு இப்படி அனைத்துமே மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்யலாம்.

முருங்கை கீரை பொடி செய்வது எப்படி ?

முருங்கை கீரைப்பொடி தயார் செய்வதும் மிக மிக சுலபம்.

முதலில் முருங்கை கீரைகளைக் காம்பிலிருந்து உருவி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
பின்பு இலைகளை 2 முதல் 3 முறைவரை தண்ணீரில் நன்கு அலசி, ஒரு கூடையில் சேகரித்து அதன் மேல் துணி அல்லது நியூஸ்பேப்பர் கொண்டு மூடி சிறிது நேரம் உலர விடவும்.

நேரடியாக சூரிய ஒளியில் வைத்து உலர வைக்காமல், நிழலான பகுதியில் உலர வைக்கலாம்.

கீரைகள் நன்கு உலந்த பின்னர் அதனை, மிக்ஸி பயன்படுத்தி பொடியாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் இந்த பொடியினை காற்று புகாத பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்களில் அடுத்து சேமிக்கலாம்.

உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் போது சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சந்தை வாய்ப்பு:

இந்த பொருட்கள் உள்ளூர் சந்தையில் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் இதனை உலக அளவில் விற்பனை செய்யமுடியும்.

Amazon, Flipkart போன்ற தளங்களில் உங்கள் பொருட்களை விற்க முடியும். அதில் உங்கள் பொருட்களை பட்டியல் செய்துவிட்டால் ஆர்டர் வரும் போது Amazon, Flipkart போன்ற தளங்களின் ஊழியர்கள் உங்களிடம் நேரடியாக பொருளை வாங்கி விற்பனை செய்து விடுபவர்கள்.

நீங்கள் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களில் உங்கள் பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் விற்பனையை கூட்டலாம்.

வருமானம் எவ்வளவு

எந்த தொழிலாக இருந்தாலும் வியாபாரத்தை ஆரம்பித்த உடனே அதிக லாபம் பார்க்க முடியாது. அதிகபட்சம் 6 மாதங்கள் வருமானம் குறைவாக தான் இருக்கும். உங்கள் வியாபாரம் மக்களை சென்றடைய 3 மாத காலம் தேவைப்படும் அந்த நேரங்களில் நீங்கள் வருவாயில் முக்கியத்துவம் காட்டாமல் வியாபார உத்திகளை உயர்த்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக

நீங்கள் தயாரிக்கும் ஒரு பாக்கெட் முருங்கை கீரை பொடியினை 30 ரூபாய்க்கு விற்றால், தினம் 100 பாக்கெட் விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு 3,000 கிடைக்கும். அதுவே மாதத்திற்கு 90,000 ரூபாய் கிடைக்கும்.

அதில் பொடிகள் தயாரிக்கும் செலவு, பாக்கெட் செலவு போன்ற செலவுகள் 30,000 என்றாலும் உங்களுக்கு 60,000 வரை மாதம் மிச்சப்படும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

Advertisement