பெண்கள் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில்
நம் முன்னோர்கள் காலத்தில் பெரும்பாலான வீட்டில் பெண்களை படிக்க வைக்கவில்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லா துறைகளிலும் படிக்கின்றனர். படிப்பதோடு மட்டுமில்லாமல் வேலைக்கும் செல்கின்றார்கள். இருந்தாலும் இன்னும் சிலரது வீட்டில் வேலைக்கு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டிக்கிறார்கள். காரணம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில் ஏதும் இருந்தால் அதனை செய் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் பெண்கள் வீட்டில் இருந்து கொண்டு செய்ய கூடிய தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.
Stitching Business Ideas:1
தையல் தொழிலுக்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலே இருந்தே இந்த தொழிலை செய்யலாம். அதற்கு உங்களுக்கு சுடிதார், Blouse, சட்டை, Pant போன்றவை தைக்க தெரிந்தால் போதும். இல்லையென்றால் Blouse மட்டும் தைக்க தெரிந்தாலே போதும்.
இந்த தொழில் செய்வதற்கு ஒரு தையல் மிஷின், ஊசி, நூல், கத்தரிக்கோல் மட்டும் தேவையான பொருட்கள் ஆகும். இவை எல்லாம் வாங்குவதற்கு ஒரு 6,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
நீங்கள் ஒரு சுடிதார் தைத்தால் 300 ரூபாய் சம்பாதிக்கலாம், அதுவே 10 சுடிதார் தைத்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
ஒரூ பிளவுஸ் தைய்ப்பதற்கு 200 ரூபாய், அப்போ 10 பிளவுஸ் தைத்தால் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம். மாதத்திற்கு தோராயமாக 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
பண்டிகை நாட்களாக இருந்தால் வருமானம் சாதாரண நாட்களை விட அதிகமாக கிடைக்கும்.
தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்
Stitching Business Ideas: 2
எனக்கு பிளவுஸ், சுடிதார் எதுமே தைக்க தெரியாது அப்படியென்றால் கிழிந்த துணிகள் மற்றும் புது துணிகளை ஓரம் மட்டும் அடித்து கொடுக்க தெரிந்தாலே போதுமானது.
ஒரு நைட்டி ஓரம் அடிப்பதற்கு 20 ரூபாய் வாங்குகிறார்கள். அப்போ நீங்கள் 5 நைட்டி அடித்தீர்கள் என்றால் 100 ரூபாய் சம்பாதித்து விடலாம்.
பெண்களே உங்களுக்கான தொழில் இது, மாத வருமானம் 20,000 வரை பெறக்கூடிய Eco Friendly Business….
மேலும் உங்க ஊரில் உள்ள டைலரிடம் நிறைய ஆர்டர்கள் வரும் இடத்தில் சென்று பிளவுஸிற்கு கொக்கி வைத்து தருகிறேன் எதாவது சட்டை இருந்தால் தரீங்களா என்று கேட்க வேண்டும். அவர்கள் ஓகே என்றால் அதா தொழிலை செய்ய சொல்வார்கள்.
இதில் எப்படி சம்பாதிப்பது என்று யோசிக்கிறர்களா ஒரு சட்டைக்கு கொக்கி வைப்பதற்கு 10 ரூபாய் அப்போ நீங்கள் 50 சட்டைக்கு கொக்கி வைத்து கொடுக்கிறீர்கள் என்றால் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு தையல் தொழில்களில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதை செய்து வாழ்வில் முன்னேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |