பெண்களுக்கான 1000 ரூபாய் முதலீட்டில் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

monthly 10000 business for ladies in tamil

Monthly 10000 Business for Ladies 

நம் முன்னோர்கள் காலத்தில் மனைவிமார்கள், படித்து முடித்த பெண்கள் என இருவரும் அதிகமாக வேலைக்கு செல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக குடும்பத்தில் இருக்கும் ஆண் தான் வேலைக்கோ அல்லது சுயதொழிலோ செய்து வருவார்கள். அப்படி பார்த்தால் வேலைக்கு செல்லும் நபரின் பணத்தினை வைத்து தான் குடும்பத்தை சமாளிக்க வேண்டும். காலப்போக்கில் இவை அனைத்தும் மாறி இன்றைய கால தலைமுறையினர் அதுவும் குறிப்பாக பெண்கள் தங்களிடம் உள்ள திறமை மற்றும் படிப்பினை வைத்து சுயதொழில் சேது வருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த ஆசை இருந்தும் கூட அதற்கான முதலீடு அதிகமாக இருக்குமோ..? என்ற கேள்வியினை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை விட்டு விடுகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குறைந்த முதலீட்டில் மாதம் 10,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய தொழில்கள் எண்ணற்றவை இருக்கிறது. எனவே இன்று ஒரு அருமையான சுயதொழிலை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பெண்களுக்கான சிறு தொழில்கள்:

பெண்களுக்கான சிறு தொழில்கள்

ஒரு வீட்டிற்கு மஹாலக்ஷ்மி அம்சம் வர வேண்டும் என்று அனைவருடைய வீட்டிலும் வாசல் தெளித்து கோலமிடுவார்கள். அந்த வகையில் கோலம் போட வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக கோலமாவு வேண்டும்.

அதனால் நீங்கள் வெள்ளை மற்றும் வண்ணங்கள் நிறைந்த கோலமாவினை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பார்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் இது பெரும்பாலும் அனைவருக்கும் அதிகமாக தேவைப்படக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

தேவையான முதலீடு:

இந்த சுயதொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப கால முதலீடாக 1000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

தேவையான மூலப்பொருள்:

மேலும் இதில் நீங்கள் வெள்ளை கோலமாவு மற்றும் கலர் கோலமாவு என இரண்டு வகையாக தயாரிக்கப்போவதால் அதற்கு ஏற்றவாறு மூலப்பொருளை வாங்கி கொள்ள வேண்டும்.

தேவையான இடம்:

பெண்கள் இந்த சுயதொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் வீட்டின் ஒரு பகுதியில் வெறும் 10×10 மட்டும் இருந்தாலே போதும்.

பெண்களே, எழுதும் திறமை போதும் நாளைக்கு 2 மணி நேரம் என மாதத்திற்கு 60 மணிநேரம் வேலை, 15,000 வரை லாபம்..

தொழில் தொடங்கும் முறை:

தொழில் தொடங்கும் முறை

இத்தகைய தொழிலை நீங்கள் செய்வதற்கு முன்பாக முதலில் கோலமாவு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதற்கான முறையான செய்முறை விளக்கத்தினை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகையால் இதனை முதலில் கற்றுக்கொண்டு அதன் பிறகு நீங்கள் கோல மாவினை தயாரித்து விற்பனை செய்யலாம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business

வருமானம்:

நீங்களே ஒரு கடையாக ஆரம்பித்தும் கோலமாவினை விற்பனை செய்யலாம். மேலும் இதர கோலமாவு கடைகளிலும் ஆர்டர் முறையில் எடுத்து கோலமாவினை விற்பனை செய்யலாம்.

ஆகையால் நீங்கள் விற்பனை செய்யும் முறை மற்றும் கிலோ கணக்கினை பொறுத்து தான் வருமானம் என்பது அமையும். அப்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக நீங்கள் 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் வருமானம் பார்க்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil