உங்க வீட்ல உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.!

Advertisement

மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்க

பொதுவாக மனிதர்கள் அனைவரும் அன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேலைக்கு செல்கிறோம். ஆனால் சில பேர் பிடித்த வேலையும், சில பேர் பிடிக்காத வேலையும் செய்கிறார்கள். இப்படி பிடிக்காத வேலையை செய்வதற்கு தாமாக சுயதொழில் செய்யலாம் நினைக்கிறார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்வது:

இந்த பதிவில் நாம் உட்கார்ந்து கொண்டே ஈசியாக செய்ய கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதவாது புரோக்கர் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் ஆனது என்றும் அழியாத தொழிலாகவும் இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.

இடம்:

மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்க

புரோக்கர் தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீடே போதுமானது. யாரும் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டிற்கு வர சொல்லலாம். இல்லையென்றால் வெளியில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு வர சொல்லி சந்தித்து பேசலாம்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

புரோக்கர் தொழிலுக்கு முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் என்று ஏதும் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் வாங்க போவதும் இல்லை, விற்க போவதும் இல்லை.

ஒரே மாதத்தில் முதலீட்டிற்கு 2 மடங்காக லாபம் தரும் அருமையான தொழில்…!

தேவையானது:

இந்த தொழிலுக்கு தேவையானது என்று பார்த்தால் ஒரு வண்டி தேவைப்படும். ஏனென்றால் அலைய வேண்டியிருக்கும் அதனால் போய்ட்டு வருவதற்கு ஈசியாக இருக்கும்.

எப்படி செய்யலாம்:

புரோக்கர் தொழிலில் பல வகைகள் உள்ளது, அதில் உங்களுக்கு எது ஈசியாக உள்ளதோ அல்லது எல்லாவற்றையும் வேண்டுமானாலும் செய்யலாம்.

  • மணப்பெண் அல்லது மணமகன் பார்த்து கொடுப்பது
  • வண்டி அல்லது கார் விற்பனை
  • இடம் விற்பனை

மேல் கூறப்பட்டுள்ள வகைகளில் இந்த தொழிலில் செய்யலாம்.

வரன் பார்த்து கொடுக்கும் புரோக்கராக இருந்தால் எங்கெங்கு இருக்கிறது என்று அறிந்திருக்க வேண்டும்.

அடுத்து நீங்கள் வண்டி அல்லது கார் விற்பனை புரோக்கராக இருந்தால் எந்தெந்த வண்டி எவ்வளவுக்கு போகும் என்று அறிந்திருக்க வேண்டும்.

இடம் விற்பனை புரோக்கராக இருந்தால் எங்கெல்லாம் இடம் விற்பனைக்கு உள்ளது, யார் இடத்தை தேடி அலைகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இத விட முக்கியம் நீங்கள் புரோக்கர் தொழில் பார்ப்பது மற்றவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களை நாடி வருவார்கள்.

வருமானம்:

நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு வருமானம் மாறுபடும். தோராயமாக மாதத்திற்கு 10,000 ரூபா சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement