Most Successful Small Business Ideas in Tamil
பொதுவாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தலும் அன்றைய நாள் செலவுக்கே சரியாய் போகிறது என்று கவலைப்படுவபவர்கள் ஏராளமானோர். நீங்கள் பணத்தையும் சம்பாதிக்கணும், அவை எதிர்காலத்திற்கும் உதவும், அப்படி ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அப்படி என்ன தொழிலாக இருக்கும் என்று நினைத்து கொண்டே முழு பதிவையும் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
பணம் சம்பாதிப்பது எப்படி.?
இந்த தொழிலானது எப்பொழுதும் Demand உள்ள தொழிலாக தான் இருக்கும். அதாவது வாடகை கடை தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றாம். இந்த தொழில் செய்வதற்கு இடம், முதலீடு, மூலப்பொருள், வருமானம் போன்ற விவரங்களை அறிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு இடம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்க்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளுக்கு பக்கத்தில் உள்ளவாறு ஒரு இடத்தை பார்க்க வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இடத்தை பார்த்து விட்டு அதனை வாங்கி விட்டீர்கள். அடுத்து அதில் கடை கடையாக கட்டிடங்களை கட்ட வேண்டும். இதற்கு ரொம்ப செலவாகாது ஏனென்றால் ஒரே கட்டிடமாக கட்டி அதில நடுவில் மட்டும் சுவர் வைத்து தடுக்க வேண்டியிருக்கும்.
மூலப்பொருள் என்று பார்த்தால் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான கம்பி, செங்கல், சிமெண்ட், தண்ணீர் போன்றவை தேவைப்படும். உங்களிடம் இடத்தை பொறுத்து செலவு மாறுபடும்.
நீங்கள் 10 கடை கட்ட போகிறீர்கள் என்றால் 5 லட்சம் தேவைப்படும். இவை கடை கட்டுவதற்கு மட்டும் தான், இடம் உங்களிடம் இருந்தால் பிரச்சனையில்லை, அதுவே இடம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக செலவாகும். இது இடத்தை பொறுத்து பணம் மாறுபடும்.
வருமானம்:
முக்கியமாக நீங்கள் மெயின் ஆன இடத்தில் கடையை கட்டி விட்டீர்கள் என்றால் நாளடைவில் உங்களை நாடி கஸ்டமர் வருவார்கள். அதனால் நீங்கள் கடையை பொறுத்து வாடகையை நிர்ணயித்து கொள்ளலாம். தோராயமாக ஒரு கடைக்கு 3000 ரூபாய் என்று வாடகை வைத்தாலும் உங்களிடம் 5 கடை இருக்கிறது என்றால் 15,000 ரூபாய் சபாதிக்கலாம்.
நீங்கள் இந்த தொழிலில் ஒரு முறை முதலீடு போட்டால் போதும் மாதம் மாதம் வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதனால் இந்த தொழிலை தயங்காமல் செய்யுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |