இதுவரை யாரும் முயற்சிக்காத தொழில்.. ஆரம்பிச்சா நீங்க தான் முதல் ஆளாக இருப்பிங்க..!

Advertisement

Natural Body Scrubber making Business

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. நமது பதிவில் தினமும் பலவகையான தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பதும் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான். இன்றைய கால கட்டத்தில் சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். இப்பொழுது பெண்கள் கூட சுயமாக வீட்டில் இருந்தபடியே அல்லது வெளியிடத்திலோ தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றன. ஆக நீங்கள் சுயமாக தொழில் தொடங்க விரும்பிக்கிறீர்கள் இருப்பினும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதில் பல யோசனை இருக்கிறது என்றால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த முதலீட்டில் வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பை பற்றித்தான் இன்று நாம் தேய்ந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அந்த காலம் முதல் இந்த காலம் வரை நஷ்டமே இல்லாத தொழில் இதுதாங்க..!

என்ன தொழில்?பீர்க்கங்காய் நார்

பொதுவாக நாம் குளிக்கும் போது தேய்த்து குளிப்பதற்கு நாரினை பயன்படுத்துவோம். இருப்பினும் அது பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நாராக தான் இருக்கும். அந்த காலத்தில் எல்லாம் பீர்க்கங்காய் நாரினை தான் உடம்பிற்கு தேய்த்து குளிப்பார்கள்.

இந்த பீர்க்கங்காய் நாரினை நாம் உடலிற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. குறிப்பாக பீர்க்கங்காய் நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆனால் இப்போதேல்லாம் இந்த பீர்க்கங்காய் நார் நமக்கு எளிதாக கிடைப்பதில்லை. ஆக இதனை நாம் ஒரு தொழிலாக செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும்.

இந்த தொழிலுக்கு மிகவும் முக்கியமான மூலப்பொருள் பீர்க்கங்காய் தான், பீர்க்கங்காயை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்தாலே பீர்க்கங்காய் நார் தயாராகிவிடும்.

பிறகு நீங்கள் உங்கள் தெரிவில் உள்ளவர்களிடம், உங்கள் உறவினர்களிடம் முதலில் விற்பனை செய்து பாருங்கள்.

பீர்க்கங்காய் நார் நன்கு விற்பனை ஆகிறது என்றால் பீர்க்கங்காய் நாரினை ஒரு பாக்கெட்டிற்கு 5 என்ற விதம் பேக்கிங் செய்து, நீங்களே மக்களிடம் நேரடியாக விற்பனை செய்யலாம். அல்லது டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேன்சி ஸ்டோர், மளிகை கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் ஸ்டோரிலும் நீங்க விற்பனை செய்யலாம், ஆன்லைனில் இந்த பீர்க்கங்காய் நாரினை பலர் ஆர்டர் செய்து வாங்குகின்ற. ஆக நீங்க எப்படி விற்பனை செய்தாலும் லாபம் உங்களுக்கு தான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 2 மணி நேரத்தில் 2,000 ரூபாய் எளிமையாக இந்த தொழிலின் மூலமாக சம்பாதிக்கலாம்..!

வருமானம்:

பீர்க்கங்காய் நாறு ஒன்றினை நீங்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு நாளுக்கு 5 பீர்க்கங்காய் நார் உள்ள பாக்கெட்டினை 20 நபரிடம் விற்பனை செய்தாலே போதும் உங்களுக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு என்று பார்த்தால் 30000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement