Painting Shop Business Plan
மனிதனின் வாழ்க்கையில் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கு பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். இதில் பிடித்த வேலையை சில பேர் செய்கின்றனர். சில பேர் பிடிக்காத வேலையாக இருந்தாலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பார்க்கிறார்கள். நிறைய நபர்களுக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் நம் பதிவில் சுயதொழில் யோசனைகளை பற்றி வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையாக தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Painting Shop Business Plan:
பெயின்டிங் தொழில் என்பது என்றும் அழியாத தொழிலாக இருக்கிறது. வீடுகள், பள்ளி கட்டிடம், அலுவலக கட்டிடம் மற்றும் பல கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது வழக்கத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதால் இந்த தொழிலை நீங்கள் தைரியமாக செய்யலாம். கட்டிடம் என்று ஒன்று இருந்தால் அதனை அழகுபடுத்துவதற்காக கட்டாயம் பெயிண்ட் அடிப்பார்கள். இதற்கு பெயிண்ட் அடிப்பதற்கு இரண்டு தேவைப்படும். ஒன்று பெயிண்ட் மற்றொன்று பெயிண்டர். அதனால் தான் இந்த பதிவில் பெயிண்ட் ஷாப் தொழிலை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
3 மணி நேரம் வேலைப்பார்த்தால் போதும் நிலையான வருமானத்தை உருவாக்கும் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா…
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…
இடம்:
இந்த தொழிலை நீங்கள் மக்கள் போக்குவதர்த்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். மேலும் main ஆன இடமாகவும் இருக்க வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் பெயிண்ட் தான். நீங்கள் மொத்தமாக வாங்கும் இடத்தில் அனைத்து விதமான நிறத்திலும் பெயிண்டை வாங்கி வைத்து கொள்ளவும். மேலும் சிறியது முதல் பெரியது வரைக்கும் வாங்கி கொள்ள வேண்டும். பெயிண்ட் மட்டுமில்லாமல் சுண்ணாம்பையும் வாங்கி கொள்ள வேண்டும். பிரஷும் சிறியது முதல் பெரியது வரைக்கும் வாங்கி கொள்ள வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் வாங்குவதற்கு 2 லட்சம் முதலீடாக தேவைப்படும். இடத்திற்கு வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் இடத்தை பொறுத்து வாடகையானது மாறுபடும். தோராயமாக 3000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் விற்பனையை பொறுத்தது. ஒரு நாள் விற்பனை நன்றாகவும் ஆகலாம், ஒரு நாள் குறைவாகவும் இருக்கலாம். அதனால் தோராயமாக ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
தினமும் 2 மணி நேரம் போதும் உட்கார்ந்த இடத்திலேயே 4,000 ரூபாய் சம்பாதிக்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |