Per Day 40000 Income Business in Tamil
மனிதனின் வாழ்க்கையில் பணம் என்பது இன்றிமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பிடித்த வேலையாக இருந்தாலும் சரி பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லாமல் இருந்தாலும் சரி பணம் வேண்டுமே என்பதற்காக ஓடுகின்றனர். சில பேர் ஏதவாது சுயதொழில் செய்யலாமா என்று யோசிக்கிறார்கள். ஏனென்றால் பிடிக்காத வேலையை செய்வதற்கு தாமாக சுயதொழில் செய்தால் ஆவது முதலாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழிலை பற்றி பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தினமும் 40,000 ரூபாய் வருமானம் தரும் தொழில்:
இந்த பதவில் டைல்ஸ் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது நம் முன்னோர்கள் காலத்தில் மண் தரை பயன்படுத்தினார்கள், அதன் பிறகு நாம் அப்பா காளத்தில் சிமெண்ட் தரை, இப்போது டைல்ஸ் தரையாக மாறிவிட்டது. சிமெண்ட் தரை இப்போது அதிகமாக யாரும் போடுவதில்லை. டைல்ஸை தான் விரும்புகின்றனர். எந்த கட்டிடமாக இருந்தாலும் அதற்கு தரை என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த தொழிலை மூன்று விதமாக செய்யலாம். அவை எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
4 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
மாதிரி அடிப்படையிலான ஓடுகள் வணிகம்:
குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். அதாவது மொத்த டைல்ஸ் வியபாரிகளிடமிருந்து ஒவ்வொரு டைல்ஸ் மாடல்களையும் ஒன்று வாங்கி கொள்ளுங்கள். இதற்கு சிறியதாக 300 சதுரடி இடம் இருந்தால் போதும். நீங்கள் வைக்கும் கடையானது மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் மாடல் டைல்ஸை காண்பித்து அவர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் நீங்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதற்கு மூன்று முதல் ஐந்து லட்சம் முதலீடு தேவைப்படும்.
இந்த தொழிலில் 7% -10% லாபம் கிடைக்கும்.
கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
பங்கு சார்ந்த டைல்ஸ் வணிகம்:
இந்த தொழிலானது மொத்த டைல்ஸ் வியாபாரிகளிடமிருந்து டைல்ஸை நீங்கள் வாங்க வேண்டும். நெனெகல் டைல்ஸ் மாடலை காட்டுவதற்கு 300 சதுரடி முதல் 1500 சதுரடி வரை உள்ள இடம் தேவைப்படும்.
உங்களிடமிருந்து வடிக்கையாளர்கள் நேரடியாக வந்து டைல்ஸ்களை வாங்கி கொள்வார்கள். இதற்கு 20 முதல் 30 லட்சம் முதலீடு தேவைப்படும்.
இதில் 12% முதல் 18% லாபம் கிடைக்கும்.
டைல்ஸ் மொத்த வியாபாரம்:
நீங்கள் மொத்தமாக டைல்ஸை வாங்கி வைத்து கொள்வீர்கள், இதன் மூலம் சில்லறை கடைகளுக்கு டைல்ஸை விற்பனை செய்யலாம்.
இதற்கு குறைந்தபட்சம் 2000 சதுரடியில் இடம் தேவைப்படும். நீங்கள் சில்லறை கடைகளுக்கு டைல்ஸை இலவசமாக வழங்க வேண்டியிருக்கும். இதற்கு 40 முதல் 75 லட்சம் முதலீடு தேவைப்படும்.
டைல்ஸ் மொத்த வியாபாரத்தில் 3% முதல் 7% லாபம் கிடைக்கும்.
என்னென்ன சான்றிதழ் தேவைப்படும்:
இந்த தொழிலுக்கு ஜிஸ்டி சான்றிதழ், கடை நிறுவனம் சான்றிதழ் போன்றவை தேவைப்படும்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |