Post Office MPKBY Agent Details in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால், எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம் மாதம் 40 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடிய ஒரு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த திட்டத்தை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. போஸ்ட் ஆபிஸ் என்று சொன்னதுமே உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம், நாம ஏதாவது பணம் டெபாசிட் பண்ணணுமோனு. நீங்க எந்த ஒரு தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் நீங்கள் மாதம் மாதம் உங்களுக்கு வரும்மானம் கிடைக்கும். சரி இந்த திட்டத்தின் பெயர் என்ன, யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய முடியும் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
Post Office RD Agent:
அஞ்சல் அலுவலகத்தில் நீங்க ஒரு முகவராக (Post Office RD Agent) சேர்ந்து மாதம் நீங்கள் வருமானம் பெறலாம்.
Post Office RD Agent-ஆக சேர்வதற்கு நீங்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.
மேலும் Post Office RD Agent ஆக நீங்கள் எந்த ஒரு தேர்வு எழுதவேண்டிய அவசியம் இல்லை.
இந்த திட்டத்தின் பெயர் மகிளா பிரதான் க்ஷேத்ரிய பச்சத் யோஜனா முகவர் என்றழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Mahila Pradhan Khestriya Bachat Yojna (MPKBY) என்றழைக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக RD Agent என்றும் சொல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எப்படி வருமானம் கிடைக்கும்?
பொதுவாக ரெக்கரிங் டெபாசிட் தொகையை பொதுமக்களே நேரடியாக அஞ்சல் அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்துவார்கள். அதுவே நீங்கள் RD Agent ஆக பதிவு செய்தீர்கள் என்றால். நீங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து அஞ்சல் அலுவலகத்தில் செலுத்தினால். நீங்கள் எவ்வளவு தொகையை செலுத்தினீர்களோ அவற்றில் இருந்து 4% உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
உதாரணத்திற்கு மாதம் மாதம் நீங்கள் 10 லட்சம் ரூபாயை பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்து அஞ்சல் அலுவலகத்தில் செலுத்தினால் உங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைக்கும்.
தகுதி:
பொதுவாக அஞ்சல் அலுவகத்தில் RD Agent ஆக பெண்கள் மட்டுமே சேர முடியும்.
மேலும் RD Agent ஆக சேர விரும்பும் பெண்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு துறையில் கண்டிப்பாக பணிபுரிந்திருக்க கூடாது.
அதேபோல் ஒருவர் RD Agent ஆக இருக்கும் போது அவர்களது குடும்பத்தில் யாரும் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய கூடாது.
செக்கூரிட்டி பாண்ட்:
RD Agent ஆக சேர விரும்பும் பெண்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தி செக்கூரிட்டி பாண்ட் வாங்க வேண்டியதாக இருக்கும்.
நீங்கள் RD Agent ஆக இருக்கும் வரை இந்த செக்கூரிட்டி பாண்ட் இருக்கும். RD Agent-ஐ நீங்கள் க்ளோஸ் செய்யும் போது இந்த 500 ரூபாயை உங்களிடமே கொடுத்துவிடுவார்கள்.
Appointing Authority:
RD Agent ஆக அதிகாரிகள் யார்யார் என்று பார்ப்போம்.
சம்பந்தப்பட்ட பகுதியின் மாநில அரசின் சிறுசேமிப்பு இயக்குனரை நியமிக்கும் அதிகாரி நியமன அதிகாரியாக இருப்பார்.
மாநில அரசின் கீழ் உள்ள மாவட்டங்களின் கலெக்டர்கள் / துணை கமிஷனர்கள் நியமன அதிகாரியாகவும் இருப்பார்கள்.
ஆக RD Agent-க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேல் கூறப்பட்டுள்ள அதிகாரிகளிடம் விண்ணங்களை சமர்ப்பிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீசில் 9% வட்டியுடன் மாதம் 10,000 ரூபாய் வருமானம் அளிக்கும் முதலீடு திட்டம்..!
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |