Watch Shop Business Plan
இன்றைய காலத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் பணம் எவ்ண்டும் என்பதற்காக கிடைத்த வேலையை செய்கின்றனர். அதிலும் பிடித்த வேலையாக இல்லாவிட்டாலும் பணம் வேண்டும் என்ற கட்டாயத்தில் வேலை பார்க்கின்றனர். இது போல பிடிக்காத வேலையை செய்வதற்கு தாமாக சுயதொழில் செய்யலாம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அதா வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழில் பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
இந்த பதிவில் பார்க்க போகின்ற தொழிலானது கடிகார கடை தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போன்றோம். இந்த தொழிலுக்கு எப்போதும் அழிந்து போகாத தொழில் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் வீடு என்று ஒன்று இருந்தால் அதில் கடிகாரம் இல்லாமல் இருக்காது. அது போல பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை கையில் வாட்ச் கட்டும் பழக்கம் இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த தொழிலுக்கான இடம், முதலீடு, வருமானம் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழிலுக்கான இடம் என்று பார்த்தால் தனியாக ஒரு இடம் தேவைப்படும். இதனை மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு பக்கத்தில் உள்ளது போல் வைக்க வேண்டும்.
இந்த தொழிலுக்கு இடம் என்று பார்த்தால் சிறிய இடமாக இருந்தாலே போதுமானது.
அசால்ட்டா வீட்டில உட்கார்ந்துக்கிட்டே 20,000 ரூபா சம்பாதிக்கலாம்..
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கடிகாரம் தான். மாடல் மாடலான கடிகாரத்தை வாங்கி வைத்து கொள்ளவும். மேலும் சிறிய சைஸ் முதல் பெரியது வரைக்கும் வாங்கி வைத்து கொள்ளவும்.
அது போல கையில் கட்டும் கடிகாரமும் வாங்கி வைத்து கொள்ளவும். புது புது மாடலாக வாங்கி வைத்து கொள்ளவும்.
இதற்கு முதலீடு என்று பார்த்தால் உங்களிடம் இடம் இருந்தால் அதற்கு வாடகை பிரச்சனை இருக்காது. அதுவே இடம் இல்லையென்றால் மாதம் மாதம் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும்.
வருமானம்:
இதில் வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் விற்பனையை பொறுத்து அமைகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |