வாங்கி விற்கும் இந்த தொழிலை செய்தால் போதும்.. நல்ல லாபம் பெறலாம்.!

Advertisement

Low Investment Business Ideas

காலங்கள் மாற மாற அதற்கேற்றவாறு நாம் பயன்படுத்தும் பொருட்களும் மாறிவருகின்றன. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அன்றாட தேவைகளுக்கே சரியாக இருக்கிறது. பிறகு எப்படி எதிர்கால தேவைக்காக சம்பாதிக்க முடியும். அதற்கு ஒரே வழி சுயமாக ஒரு தொழில் செய்வதுதான். சுயதொழில் செய்வதற்கு முன், இக்காலத்தில் எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அந்த தொழிலாக பார்த்து செய்ய வேண்டும். அப்பொழுதான் சுயதொழிலில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். எனவே, அப்படி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளை பற்றிய தொழிலை தான் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Scrubber Making Business in Tamil:

என்றும் அழியாத மற்றும் அதிக தேவை இருக்கின்ற Scrubber Business- ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் பயன்படுத்த கூடிய இந்த தொழிலை நீங்கள் செய்தால் விரைவில் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் ஒரே நேரத்தில் பெறலாம்.

Scrubber Making Business in Tamil

முதலீடு எவ்வளவு.?

நீங்கள் Scrubber Business-ஐ செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் அதிக தேவைப்படாது. Scrubber வாங்குவதற்கான முதலீடு மட்டும் தோராயமாக 1,000 ரூபாய் இருந்தால் போதும்.

தொழில் செய்ய எவ்வளவு இடம் தேவை.?

Scrubber Business-ஐ தொடங்குவதற்கு உங்களுக்கு பெரிய அளவிலோ அல்லது ஒரு தனி கடையோ தேவைப்படாது.வாங்கி வைத்துள்ள Scrubber-ஐ பேக்கிங் செய்வதற்கு வீட்டின் சிறிய பகுதியில் 10×10 இடம் இருந்தால் போதும்.

இத்தொழிலை எப்படி தொடங்குவது.?

இந்த தொழிலை செய்வதற்கான Scrubber-ஐ மொத்தமாக Scrubber தயாரிக்கும் இடத்தில் அல்லது Scrubber Wholesale ஷாப்பிலும் தரம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள்.

ஒரு Scrubber-ன் விலை 3 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் 1,000 ரூபாய்க்கு தோராயமாக 333 Scrubber பீஸ்கள் நீங்கள் வாங்க முடியும்.

பிறகு, நீங்கள் வாங்கி வைத்துள்ள Scrubber-ஐ ஐந்து ஐந்தாக தனியாக பிரித்து பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லையா.!

எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

5 Scrubber உள்ள ஒரு பாக்கெட் தோராயமாக 60 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் மொத்தமாக 20 Scrubber பாக்கெட் விற்பனை செய்தால் தோராயமாக 1,200 ரூபாய் வரை வருமானம் பெற முடியும். இதில் பார்த்தால் நீங்கள் முதலீடு செய்தது 1000 ரூபாய் ஆனால் சம்பாதித்தது 1,200 ரூபாய். அப்படி என்றால் 200 ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கிறது.

எங்கு விற்பனை செய்யலாம்.?

பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Wholesale கடை மற்றும் Department ஸ்டோர் அல்லது வீடுகளுக்கே சென்று கூட விற்பனை செய்யலாம்.

கல்வித் தகுதி இல்லாமல் கைநிறைய வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement