Shopify Online Business Ideas
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தினை இப்போதைக்கு உள்ள நிலைமையினை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆன்லைன் காலம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் கடைக்கு நேராக சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நாம் அனைவரும் வீட்டில் இருந்த படியே எந்த விதமான அலைச்சல் இல்லாமலும் வாங்கி கொள்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே இதை எதற்கு நான் இப்போது கூறுகிறேன் தெரியுமா..? ஏனென்றால் இதனை அடிப்படையாக வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் அது என்ன தொழில் அதனை எப்படி செய்வது என்ற முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்..?
அது என்ன தொழில் என்று ரொம்ப யோசிக்காதீர்கள் அது வேறு ஒன்றுமில்லை Shopify Online Business தான். இத்தகைய தொழில் என்பது Offline-ல் கடை இல்லாமல் இருக்கும் நபர்களுக்கான முறையினை நாம் அமைத்து கொடுக்கும் ஒரு முறை ஆகும்.
இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் உங்களுக்கான ஒரு நிலையான அடையாளத்தை காட்டும் விதமாக ஒரு பெயரினை தேர்வு செய்ய வேண்டும்.
3 மணி நேரம் வேலைப்பார்த்தால் போதும் நிலையான வருமானத்தை உருவாக்கும் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா…
மேலும் இதற்கான வேலையினை ஆரம்பிக்கும் விதமாக நீங்கள் Programing Developers-யிடம் உங்களுக்கான ஒரு ஆன்லைன் அமைப்பினை அமைத்து கொடுக்குமாறு சொல்லி தயார் படுத்திக் கொள்ளவும்.
கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
முதலீடு:
இத்தகைய தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆரம்ப முதலீடாக 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முதலீடு என்பது இன்னும் சிறிது கூடுதலாக தேவைப்படும்.
தெனாவட்டாக உட்கார்ந்து கொண்டே தினமும் 30,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
How to Start an Online Business With Shopify:
முதலில் உங்களுக்கான Program Coding எல்லாம் செட் செய்த பிறகு நீங்கள் உதாரணத்திற்கு சில வழிமுறைகளை பின்பற்றி டெமோவினை ட்ரை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் எந்த விதமான பிரச்சனையும் ஸ்டோரினை ஆரம்பித்தவுடன் இருக்காது.
மேலும் இந்த தொழிலை மூன்று விதமாக செய்யாலாம்.
- உங்களிடம் உள்ள பொருளை நீங்களே இந்த தளத்தினை பயன்படுத்தி கடை எதுவும் இல்லாமல் விற்பனை செய்து கொள்ளலாம்.
- அடுத்த கடை இல்லாமல் வீட்டிலேயே வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த தளத்தினை பயன்படுத்தி நல்ல வருமானம் பார்க்கலாம்.
- மூன்றாவதாக கடை இருந்தாலும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய தெரியாமல் இருக்கும் நபர்களும் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஜாலியா உட்கார்ந்து கொண்டே தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்ன தொழில்ன்னு தெரியுமா
பேமெண்ட் முறை:
மேல் கூறிய மூன்று முறைக்கும் எவ்வளவு தொகை, எவ்வளவு Offer, எத்தனை பொருட்கள் விற்க, எத்தனை பிரிவில் விற்க முடியும் என்ற விவரத்தை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் உங்களுடனுய தளத்தினை தேடி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறை எப்படி என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் உங்களுடைய தளத்தில் என்ன நடக்கிறது, எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆகிறது. அதில் வாடிக்கையாளரின் கருத்து என்ன என்றும், நல்ல பொருட்கள் தான் விற்கப்படுகிறதா என இதுபோன்ற தகவலை அறிந்துக் கொள்வதும் உங்களின் பொறுப்புகளில் அடங்கும்.
வருமானம்:
இந்த தொழிலில் ஆரம்பத்தில் விமர்சனம் என்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அதன் பிறகு நல்ல வரவேற்பும், முன்னேற்றமும் காணப்படும். அந்த வகையில் ஆரம்பகாலத்தில் தோராயமாக மாதம் 25,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம். அதன் பிறகு உங்களின் வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |