Best Small Business Ideas 2023 in Tamil
நாம் அனைவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட சுயமாக ஒரு தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி நினைத்தால் மட்டும் போதுமா..? அதற்கான வழிகள் என்ன என்பதை அறிய வேண்டாமா..? அதாவது, நீங்கள் ஒரு சுயதொழில் தொடங்குகிறீர்கள் என்றால் அத்தொழில் இன்றைய காலகட்டத்தில் நல்ல டிமாண்ட் உள்ள தொழிலாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொழிலை தான் நீங்கள் தேர்தெடுக்க வேண்டும். அப்போதுதான் தொழிலில் நல்ல வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். எனவே உங்களுக்கும் பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான தொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Dining Paper Roll Business Plan in Tamil:
திருமணம், காதணி விழா, வளைகாப்பு, நிச்சயதார்த்தம் என அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பந்தி வைப்பதற்கு பயன்படும் டேபிள் டாப் பேப்பர் ரோல் தொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
ஆமாங்க, இத்தொழில் என்றுமே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த தொழிலை ஒரு சைடு பிசினஸ் ஆக கூட செய்யலாம். ஏனென்றால் எல்லா நாட்களிலும் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. எனவே மற்ற நேரங்களில் நீங்கள் வேலைக்கு கூட செல்லலாம்.
சுப நிகழ்ச்சிகள் வரும் நாட்களில் நீங்கள் இந்த டேபிள் டாப் பேப்பர் ரோலை மொத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமாக இதனை கம்மி விலையில் எங்கு கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி வர வேண்டும்.
அப்பொழுதுதான் இத்தொழிலில் முதலீடு போக நல்ல வருமானம் பெற முடியும்.
சொல்லப்போனால் இந்த பிசினஸ் மிகவும் எளிதான ஒரு தொழில் ஆகும். ஓகே வாருங்கள் இத்தொழில் பற்றிய சில தகவல்களை பின்வருமாறு பார்க்கலாம்.
இந்த தொழிலுக்கான மவுசு எப்போதுமே குறையாதுங்க.. மாதம் 60 ஆயிரம் அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!
தேவையான முதலீடு:
இத்தொழிலில் இதுதான் முதலீடு என்று உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால் உங்களுக்கு இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தே இத்தொழிலில் முதலீடு தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் பேப்பரின் அளவை பொருத்தும் விலை மாறுபடும்.
எனவே, உங்களுக்கான வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தால் குறைந்த அளவிலான முதலீடே தேவைப்படும். அதாவது, தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் இருந்தால் இத்தொழிலை நீங்கள் தொடங்கலாம்.
தொழில் தொடங்கும் முறை:
முதலில் நீங்கள் உங்கள் தொழிலை மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும். அதற்காக நீங்கள், உங்கள் தொழிலுக்கான விசிட்டிங் கார்டு ஒன்று தயார் செய்து உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தொழில் நன்கு வளர்ச்சி அடையும். மேலும், இந்த டேபிள் டாப் பேப்பர் ரோல் பலவகையான அளவுகளில் கிடைக்கிறது. எனவே விற்பனைக்கு ஏற்ற அதாவது உங்களுக்கு விருப்பமான அளவுகளில் வாங்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு, நீங்கள் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
உதாரணமாக 1 கிலோ எடையுள்ள பேப்பர் ரோல் 250 ரூபாய் விற்கப்படுகிறது. எனவே நீங்கள் இதற்கு குறைவான விலையில் 230 ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும்.
எனவே 1 சுப நிகழ்ச்சியில் தோராயமாக 15 ரோல் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,450 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள வருமானம், முதலீடு மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் நீங்கள் செய்யும் தொழில் அளவு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து அனைத்தும் மாறுபடும். அதுமட்டுமில்லாமல் சுயதொழில் தொடங்குபவர்களுக்கான ஒரு வித ஐடியாக்களை தெரிவிப்பதற்காகவே இப்பதிவு.
அலைச்சலே இல்லாமல் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்க அசத்தலான இந்த தொழிலை செய்யுங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |