ஒன்னு விற்றால் 10,000 ரூபா சம்பாதிக்கலாமா
நீங்க தனியார் துறையில் வேலை பார்க்கும் போது அதே நம்பி மட்டுமே இருக்க கூடாது. அந்த தொழில் இல்லையென்றாலும் உங்களால் பொருளாதாரத்தை சமாளிக்க வேண்டும். அது எப்படி முடியும் நான் அந்த வேலை மட்டும் தான எனக்கு காசு வருகிறது என்று கேட்பீர்கள். தனியார் வேலையை நீங்க நம்ப முடியாது. ஏனென்றால் எப்போ வேணாலும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சைடு பிஸ்னஸ் ஒரு இருக்க வேண்டும். நீங்க வேலைக்கு சென்றாலும் உங்க வீட்டில் அப்பா, அம்மா, மனைவி இருப்பார்கள். அதனால் இந்த தொழிலை நீங்க தாரளமாக செய்யலாம்.
வீட்டில் இருந்து செய்ய கூடிய சைடு பிஸ்னஸ்:
இந்த பதிவில் பார்க்க கூடிய தொழில் ஆடு வளர்ப்பு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் என்று அழியாத தொழிலாகவும் இருக்கிறது. அதனால் நீங்க தாராளமாக செய்யலாம். இந்த தொழில் செய்வதற்க்கு முதலீடு மற்றும் வருமானத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவைப்படும். அதாவது உங்க வீட்டிற்கு பக்கத்திலேயே செட் மாதிரி போட்டு கொள்ளலாம். ஆடுகளை கட்டுவதற்க்கு தான் இந்த இடம் தேவைப்படும்.
நீங்க கிராமத்தில் இருந்தாலும் சரி, டவுன்ல இருந்தாலும் சரி இந்த தொழிலை அடிச்சுக்க ஆளே இல்லை..
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
- இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் ஆடுகள் தான். அதனால் நீங்கள் ஆடுகளை வாங்கி கொள்ள வேண்டும். உங்களால் எத்தனை ஆடுகள் வாங்க முடியுமோ அந்த அளவிற்கு வாங்கி கொள்ள வேண்டும். ஒரு ஆட்டை வாங்குவதற்கு 5000 ரூபா முதல் 7000 ரூபாய் தேவைப்படும்.
- நீங்க ஒரு ஆடு வாங்கினாலே அவற்றிலிருந்து 4 ஆடுகள் என்று பெருகும்.
- இதை முழு நேரம் பார்க்க வேண்டியதில்லை, இதற்கு தேவைப்படுவது புல் மற்றும் தண்ணீர் தான்.
- வெளியில் சென்று மேய்த்து விட்டு வரலாம், அப்படி இல்லையென்றால் புல்லை மட்டும் அறுத்துட்டு வந்து வைக்கலாம்.
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் ஒரு ஆட்டை விற்கிறீர்கள் என்றால் 10,000 ரூபா சம்பாதிக்கலாம். ஆடுகள் விற்பனையை பொறுத்து வருமானம் அமைகின்றது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |