சில்க் தரேட் நகைகள்
பெண்கள் அதிகம் விரும்பும் பொருட்கள் என்றால் அது பேஷன் நகைகள் தான். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் தங்க நகைகளை விரும்புவதில்லை. கிறிஸ்டல் நகை, சில்க் தரேட் வேலைப்பாடு கொண்ட நகைகளில் தான் அதிகம் விரும்புகிறார்கள். அந்த நகைகள் தான் அனைத்து விதமான ஆடைகளுக்கு ஏத்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் சில்க் தரேட் மூலம் செய்யும் பேஷன் நகைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. அத்தகைய சில்க் தரேட் நகைகள் தயாரிக்க எவ்வளவு முதலீடு தேவைபடும், அந்த நகைகளை எவ்வாறு சந்தை படுத்துவது போன்ற தகவல்களை எந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்….
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியவர்கள் அதிகம் விரும்பி வாங்கும் நகையாக சில்க் தரேட் நகைகள் இருக்கின்றது. இது போன்ற நகைகள் இப்போது பிறந்தநாள் விழாக்களுக்கு பரிசாக வழங்குகிறார்கள்.
சில்க் தரேட் நகைகள் மூலம் மாதம் 15,000 வரை சம்பாதிக்கலாம்
நீங்கள் ஒரு கைவினை செய்யும் நபர் அல்லது உங்களுக்கு கைவினை பொருட்கள் உருவாக்குவாதில் அதிக ஈடுபாடு உள்ளது என்றால் கண்டிப்பாக நீங்கள் எந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.
ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு சில்க் தரேட் நகைகளை 50 வரை தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 வரை தயாரிக்க முடியும்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
சிறிய அளவு நகைக்கு ரூ.90/- முதல் ரூ.110/- வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150/- முதல் ரூ.160/- வரையும், பெரிய அளவுக்கு ரூ.200/- செலவாகும்.
சிறிய அளவிலான 50 சில்க் தரேட் நகைகளை தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.3,600/- நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.1,600/- பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.3,000/- தேவைப்படும்.
அனைத்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5,000/- போதும்.
3 மணி நேரம் வேலைப்பார்த்தால் போதும் நிலையான வருமானத்தை உருவாக்கும் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா…
வருவாய் (ஒரு நாளைக்கு):
ஒரு நாள் உற்பத்திக்கு ரூ.5000/- செலவில் தயாரிக்கப்படும் சில்க் தரேட் நகைகளை குறைந்தபட்சம் 30% கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6,500/- வருவாய் பெறலாம், இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1500/- லாபம் பெறலாம்.
ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த நாள் உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும்.
விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
பெண்களுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
எப்படி இருக்கு சந்தை வாய்ப்பு ?
அனைத்து ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய சில்க் தரேட் நகைகளை தயாரிக்கலாம். இளம்பெண்கள் இதை விரும்பி வாங்குவார்கள் மற்றும் இதை அதிக கலைநயத்துடன் இருப்பதால் பெரியவர்களும் விரும்பி வாங்குவார்கள்.
இவை மிகவும் அழகாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் உள்ளதால், பலர் பரிசளிக்க இந்த சில்க் தரேட் நகைகளை வாங்குவார்கள்.
சில்க் தரேட் செயின் மட்டுமல்லாமல்,சில்க் தரேட் தோடு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.
தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழிலை செஞ்சு பாருங்க
சில்க் தரேட் நகை தயாரிப்புக்கு தேவையான பொருட்கள்:
இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண சில்க் தரேட். ச
சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19.
கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65.
கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52.
ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10.
கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |