Small Business Ideas for Diwali in Tamil
பொதுவாக பண்டிகை காலம் வரப்போகிறது என்றாலே இந்த பண்டிகைக்கு என்ன மாதிரியான தொழில் செய்யலாம் என்ற யோசனை தான் வரும். ஏனென்றால் இவ்வாறு எப்போதாவது வரும் சீசன் தொழிலை நாம் செய்வதன் மூலம் முதலீட்டை விட இரண்டு மடங்கு லாபத்தை அள்ளலாம். அந்த வகையில் பார்த்தால் தற்போது இதனான் டிமாண்ட் ஆனது அதிகமாக காணப்படும். இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதனால் இதற்கு என்ன மாதிரியான தொழில் செய்யலாம் என்று யோசித்து கொண்டிற்குப்பீர்கள். ஆகவே உங்களுடைய யோசனைக்கான ஒரு பதிலாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தீபாவளி சீசன் தொழில்:
பெரும்பாலும் ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் வீட்டில் இருப்பதை விட வெளியில் செல்லும் போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படி செய்ய வேண்டும் என்ற உடன் முதலில் வண்ணங்கள் நிறைந்த ஆடையினை தான் வாங்குவார்கள். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் என இதுபோன்ற பண்டிகை நாட்களில் எது மிகவும் ட்ரெண்டிங்காக உள்ளது என்று பார்த்து அத்தகைய ஆடையினை வாங்குவார்கள். ஆகையால் இன்று தீபாவளி டிரஸ் கலெக்சன் தொழிலை செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகின்றோம்.
முதலீடு எவ்வளவு:
இந்த தொழிற்கான முதலீடாக தோராயமாக 50,000 ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தேவைப்படும். ஆகாவே உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு கூட இதனை நீங்கள் செய்யலாம்.
மூலப்பொருள் என்ன:
தற்போது என்ன ட்ரெண்டிங்காக உள்ளது என்று பார்த்து அதற்கு ஏற்ற மாதிரியான ஆடைகளை வாங்கி கொள்வது நல்லது. அதேபோல் அளவுகளும் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு முறையில் வாங்கி கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் தரமானதாக பார்த்து Wholesale முறையில் வாங்கி கொள்வது நல்லது.
இட வசதி:
பொதுவாக எந்த தொழில் செய்தாலும் அதற்கு இடம் தான் முக்கியம். ஆகையால் நீங்கள் செய்யும் தொழிலுக்கான ஒரு இடத்தை நீங்கள் வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ அமைத்து கொள்ளுங்கள்.
மாத சம்பளத்தை விட்டு தள்ளுங்க..இந்த Evergreen Business ஆரம்பிங்க..
வருமானம் பார்ப்பது எப்படி..?
இது பண்டிகை காலம் என்பதால் உங்களுக்கு தானாகவே நல்ல வியாபாரம் வர ஆரம்பிக்கும். மேலும் இதற்கு என்று செலவு செய்து உங்களது கடையினை விளம்பர படுத்த வேண்டாம்.
லாபம்:
உதாரணமாக நீங்கள் 350 ரூபாய்க்கு ஒரு சுடிதார் ஆடையினை வாங்குனீர்கள் என்றால் அதனுடைய தரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் 850 ரூபாய் வரையிலும் அதனை விற்பனை செய்யலாம். இவ்வாறு பார்ப்பதில் 500 ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கிறது.
எனவே இதேபோல் ஆடைகளுக்கு ஏற்றவாறு மாற்றம் காணப்படும். ஆகவே இந்த தொழிலை பொறுத்தவரை 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலும் தாராளமாக வருமானமும், லாபமும் பார்க்க முடியும்.
வேலை என்னமோ ஒரு மாதம் ஆனா வருமானம் 50,000 ரூபா அப்புறம் என்ன உடனே செய்யுங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |