வாங்கி விற்கும் இந்த தொழிலை செய்து பாருங்க.. ஒரு நாளைக்கு 3000 ரூபாய் அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!

small business ideas for rainy season in tamil

Season Business Ideas in Tamil

சுயதொழில்.. சுயதொழில் தொடங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும்.இதற்காக நாம் பல முயற்சிகளையம் செய்து வருவோம். அப்படி தொழில் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழிலில் இறங்குவதற்கு முன் அதனை பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. அதாவது சம்பாதிக்கும் திறன், செய்ய வேண்டிய மொத்த முதலீடு,  குறிப்பிட்ட சந்தையில் சிறந்த போட்டியாளர்கள் மற்றும் அந்தத் தொழிலைத் தொடங்கத் தேவையான உள்கட்டமைப்பு என அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்து அதன் பிறகே தொழிலில் இறங்க வேண்டும். எனவே நீங்கள் சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள நபராக இருந்தால் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இப்பதிவில் ஒரு தொழில் பற்றிய ஐடியாவை பார்க்கலாம் வாங்க.

Rainy Season Business Ideas in Tamil:

பொதுவாக ஒவ்வொரு சீசனிற்கும் ஒவ்வொரு தொழில் அதிக லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். எனவே அந்த வகையில் இப்பதிவில் குளிர்காலத்திற்கு ஏற்ற அதாவது மழை மற்றும் குளிர்காலத்தில் லாபத்தை மட்டுமே தரக்கூடிய தொழில்பற்றி தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம்.

Rainy Season Business Ideas in Tamil

வாங்கி விற்கும் தொழில்:

இப்போது மழைக்காலம் மற்றும் பனிக்காலமும் வரப்போகிறது. எனவே இக்காலத்தில் அதிகமான மக்கள் தேடுவது பெட்சீட் (படுக்கை விருப்பு, போர்வை, கம்பளி) தான். எனவே இதனையே நாம் தொழிலாக செய்து வந்தால் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம்.

இந்த தொழில் ஒரு வாங்கி விற்கும் தொழில் என்பதால் நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், முதலில் போர்வை, பெட்சீட், கம்பளி போன்றவை எங்கு எடை மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறதோ அங்கு சென்று வாங்க வேண்டும்.

அதன் பிறகு, இதனை நீங்கள் கடையாக வைத்தோ அல்லது ஒவ்வொரு ஊருக்கும் சென்றோ விற்பனை செய்து வரலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்து வரலாம்.

 season business ideas in tamil

2 மணிநேர வேலையில்… தினமும் 500 ரூபாய் வீதம் மாதம் 15,000 ரூபாய் ஈஸியா சம்பாதிக்ககூடிய சைடு பிசினெஸ்..!

கிடைக்கக்கூடிய வருமானம்:

போர்வை அதன் தரத்திற்கு ஏற்றவாறு 100 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, நீங்கள் தரத்தின் அடிப்படையில் விற்பனை செய்து வரலாம்.

உதாரணமாக, நீங்கள் 300 ரூபாய் மதிப்புள்ள போர்வையை ஒரு நாளைக்கு 10 விற்பனை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 3000 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கிட்டால் உங்களுக்கு 90,000 ரூபாய் வரை வருமானமாக பெறலாம்.

குறிப்பு: நீங்கள் செய்யும் விற்பனையின் அளவை பொருத்தும் விலையை பொருத்தும் வருமானம் மாறுபடும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil