Small Investment Business from Home in Tamil
இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒரு மனிதனை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் அனைவரின் மனத்திலேயும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஒருசிலருக்கு மற்றவரிடம் அடிபணிந்து வேலை செய்வது என்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்கவேண்டும். அதுவும் உடனடியாக லாபம் தரக்கூடிய சுயதொழிலை தொடங்கவேண்டும் என்றும் நினைப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் காலை போட்ட முதலீட்டை இரண்டுமடங்காக மாலைக்குள் திருப்பி சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் என்னவென்று அறிந்து கொண்டு அதனை தொடங்கி அதிக அளவு பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அதிக லாபம் தரும் தொழில்:
இந்த உலகம் அழியும் வரை அழியாத மற்றும் எப்பொழுதுமே டிமாண்ட் அதிகமாக இருக்கும் ஒரு சில தொழில்கள் உள்ளன. அப்படி உள்ள ஒரு சில தொழில்களில் இந்த வீட்டிலேயே உணவு தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும் ஒன்று.
இந்த உணவு தொழிலை தொடங்கிய யாருமே நஷ்டத்தை சந்தித்ததே இல்லை. அதனால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக அளவு சம்பாதிக்கலாம்.
தொழிலை எப்படி தொடங்குவது:
இந்த தொழிலை நீங்கள் இரண்டு முறையில் செய்யலாம். அதாவது நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய தள்ளுவண்டி கடையாக தொடங்கி இந்த தொழிலை செய்யலாம். அப்படி இல்லையென்றால் நிலையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு கடையை திறந்தும் இந்த தொழிலை செய்யலாம். இதில் முதல் முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
அங்கு இங்கு என ஓடாமல் மாதம் 20,000 வரை சம்பாதிக்க அட்டகாசமான இந்த தொழிலை தொடங்குங்கள்
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருட்கள் என்றால் அது உணவு பொருட்கள் தான். நீங்கள் எந்த மாதிரியான உணவு பொருட்களை விற்பனை செய்ய போகின்றீர்களோ அதற்கேற்ற மாதிரி அதனை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மாறுபடும்.
அதே போல் நீங்கள் எந்த விதமான உணவு பொருட்களை விற்றாலும் அதற்கு தோராயமாக 5,000 ரூபாய் தான் முதலீடு தேவைப்படும்.
தேவையான இடவசதி:
இந்த தொழிலுக்கு தேவையான உணவுகளை தயாரிக்க உங்களின் வீட்டிலேயே நன்கு சுத்தமான சிறிய இடம் இருந்தாலே போதுமானது. நீங்கள் தயாரித்த உணவுகளை நீங்கள் எவ்வாறு வீரப்பனை செய்ய போகின்றிர்கள் என்பதை பொறுத்து இடவசதி மாறுபடும்.
இந்த தொழிலுக்கு எப்போதும் Demand அதிகம் தான் அதனால் உடனடியாக இதனை தொடங்குங்க
தொழில் செய்யும் முறை:
நீங்கள் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நீங்கள் அதிகமாக மக்கள் கூட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதாவது பள்ளி, கல்லூரி, பஸ்டாப் மற்றும் ஏதாவது பெரிய அலுவலகம் ஆகியவற்றுக்கு அருகில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
நீங்கள் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் விற்கும் ஒவ்வொரு உணவு பொருட்களுகும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து விற்றால் 1 மணி நேரத்துக்குள் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதித்து விடலாம்.
அப்பொழுது ஒருநாளைக்கு தோராயமாக 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதித்து விடலாம். அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
பெண்களுக்கு பிடித்த இந்த பொருளை விற்றால் நல்ல லாபம் பார்க்க முடியும்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |