Small Scale Business Ideas For Ladies in Tamil
இக்காலத்தில் பெண்கள் அனைவரும் தேடி தேடி விரும்பி வாங்கும் தொழிலை பற்றித்தான் இப்பதிவில் பார்கபோகிறோம். ஆமாங்க இக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் தன்னை அழகுபடுத்தி கொள்ள அதிகப்படியான அழகுசாதன பொருட்களை வாங்க தொடங்கிவிட்டார்கள். எனேவ இத்தொழிலை நாம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். ஓகே வாருங்கள் இத்தொழிலுக்கு தேவையான முதலீடு, மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Cosmetics Business Ideas in Tamil:
தேவையான இடம்:
இத்தொழிலை நீங்கள் மக்கள் அதிகமாக வரும் இடத்தில் தொடங்க வேண்டும். உதாரணமாக துணிக்கடை, பார்லர், ஐஸ்கிரீம் கடை போன்ற பகுதிக்கு அருகில் தொடங்கினாள் நல்ல வருமானம் பெறலாம்.
இதையே நீங்கள் கிராமபகுதியில் தொடங்க நினைக்கிறீர்கள் என்றால் கடைகள் அதிக உள்ள இடத்திலும், பஸ் ஸ்டாப்பிற்கு அருகிலும் தொடங்க வேண்டும். எனவே அதற்கேற்றவாறு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
மூலப்பொருட்கள்:
இத்தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பெண்கள் வாங்கும் பொட்டு, வளையல்கள், ஹேர் கிளிப் முதல் foundation கிரீம் வரை என அனைத்து அலங்கார பொருட்களும் தேவைப்படும். இதனை நீங்கள் முதலில் சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்து மூலப்பொருட்களை அதிகமாக வாங்கி கொள்ளலாம்.
முதலீடு:
இத்தொழிலை தொடங்க குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேவைப்படும். பிறகு கடை வாடகை மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக 50 ஆயிரம் தேவைப்படும்.
முக்கியமாக நீங்கள் மூலப்பொருட்களை வாங்கும்போது, எங்கு குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு பிறகு தான் வாங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தொழிலை செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..
கிடைக்கக்கூடிய வருமானம்:
இத்தொழிலை நீங்கள் மக்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் தொடங்கினால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொருத்தும் கடை இருக்கும் இடத்தை பொருத்தும் மாறுபடும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |