Side Business Ideas To Start in Tamil
காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் தினமும் சம்பாதிக்கும் பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது. இதனை தான் வரவுக்கு மிஞ்சிய செலவு என்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வேலைக்கு செல்வதை தவிர்த்து வேறு ஏதேனும் சைடு பிசினெஸ் செய்தால் தான் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து எதிர்காலத்தில் நமக்கான ஒரு தொகையினை சேமித்து வைத்து கொள்ள முடியும். எனவே, நீங்கள் ஒரு சைடு பிசினெஸ் தொடங்க வேண்டும் என்று எண்ணினால் இப்பதிவில் ஒரு சூப்பரான சைடு பிசினெஸ் தொழில் பற்றிய யோசனையை கூறியிருக்கிறோம். அத்தொழில் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Small Side Business Ideas in Tamil:
ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஒரு மளிகை லிஸ்ட் போட்டு வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வருவோம். இதில், அஞ்சறை பெட்டி உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருவோம். இதில் மிளகாய், மல்லி,கோதுமை மற்றும் பச்சரிசி போன்றவற்றையும் வாங்கி வருவோம். இந்த பொருட்களை எல்லாம் அரைப்பதற்கு மில்லுக்கு செல்வோம்.
என்னதான் மிளகாய், மல்லி, கோதுமை மற்றும் மாவு போன்றவை நமக்கு ரெடிமேடாக பேக்கெட்டில் கிடைத்தாலும் பெரும்பாலான மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்பதாலும் சிலருக்கு பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதால் இப்படி செய்வார்கள்.
எனவே, இதனையே நாம் ஒரு சைடு பிசினெஸ் தொழிலாக செய்து வந்தால் நல்ல வருமானம் பெறலாம்.
என்றைக்கும் கொடி கட்டி பறக்கும் தொழில்..! மாதம் 50 ஆயிரம் வரை அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!
தேவையான முதலீடு:
இத்தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக ஒரு மெஷின் மட்டுமே தேவைப்படும். எனவே ஒவ்வொரு மெஷினிற்கும் ஏற்றவாறு விலை மாறுபடும்.
எனவே நீங்கள் முதலில் குறைந்த முதலீட்டில் இத்தொழிலை தொடங்க நினைத்தால் குறைந்த விலையில் உள்ள மெஷினை வாங்கி கொள்ளலாம். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் மெஷினை வாங்கி தொழிலை தொடங்கலாம்.
தேவையான இடம்:
இத்தொழிலுக்கு இடம் தான் முக்கிய விஷயம். எனவே நீங்கள் இடத்தை தேர்வு செய்யும்போது அருகில் அதிக ஊர்கள் இருக்கும் இடமாக பார்த்து கடையை திறக்க வேண்டும்.
முக்கியமாக பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் இத்தொழிலையை தொடங்கினால் நல்ல வருமானம் பெறலாம்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
தோராயமாக ஒரு கிலோ மிளகாயை அரைக்க 20 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு 15 கிலோ மிளகாயை அரைத்து கொடுத்தால் உங்களுக்கு 300 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல், பண்டிகை மற்றும் விழாக்கால நாட்களில் உங்களுக்கு அதிகமாகவே வருமானம் வரும். எனவே நீங்கள் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் அனைத்தும் தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும். தொழில் தொடங்க நினைபவர்களுக்கு ஒரு தொழில் சார்ந்த யோசனையை கூறுவதற்கே இப்பதிவு.
குறைந்த முதலீட்டில் வாங்கும் விற்கும் இந்த தொழிலை செய்தால் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |