பிஸ்கெட் தொழில்
வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான இந்த பதிவு கண்டிப்பாக உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பி சாப்பிடுகின்ற பிஸ்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து விற்பனை செய்யலாம். உங்கள் வீட்டு சமையலறையே இதற்கு போதுமானது. வாருங்கள் இந்த தொழிலை எப்படி செய்வது, இதற்கு என்ன என்ன தேவை ஈஸியான முறையில் எப்படி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
பிஸ்கெட் தயாரிப்பு:
இன்றயை காலகட்டத்தில் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு என்றும் தனி இடம் உண்டு. பிஸ்கெட்டுகளுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது.
டீ, காபியோடு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு பழக்கமாக மாறிவிட்டது.
பிஸ்கெட்டுகள் எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.
இதை தவிர, வணிக நோக்கத்தோடு பார்த்தால் சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் வீணாகாது என்பது பிசினஸ் தொடங்குவதற்கான சரியான காரணியாக இருக்கிறது.
இப்போது பிஸ்கெட்டுகள் விதவிதமான சுவையோடும் வடிவத்தோடும் தரமான பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
தயாரிப்பு முறை:
கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி, போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
பிறகு ‘டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.
பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.
தேவையான இடம்:
இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 400 சதுரஅடி இடம் தேவைப்படும். தயாரிப்பு கொஞ்சம் பெரியதாக அமைக்க 500 முதல் 800 சதுர அடி அளவு வரை இடம் தேவை. இதை உங்கள் வீட்டிலேயே தொடங்கும் பட்சத்தில் நீங்கள் வாடகைக்கான செலவை குறைக்கலாம்.
இயந்திரங்கள்:
- டவ் மெஷின்
- மோல்டிங் டிரேக்
- பேக்கிங் மெஷின்
வருமானம்:
இது மிகவும் லாபகரமான தொழிலாக இருக்கும். சிறிய அளவில் தொடங்கினாலும் மாதத்திற்கு 50,000 வரை வருமானம் பார்க்கலாம்.
சந்தை வாய்ப்பு:
பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் பேக்கிரிகள் இருக்கும் அங்கு நமது பிஸ்கெட்டுகளை விற்கலாம்.
பெருநகரங்களில் நல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். பெருநகரங்களில் பிராண்டட் தயாரிப்புகள் அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களில் உங்களின் தயாரிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
உங்கள் தயாரிப்பு சுத்தமானதாகவும் தரமானதாகவும் இருந்தால் உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும். உணவு பொருட்களின் தரத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் சாதிக்க முடியாது.
குழந்தைகள் விரும்பும் இதனை தயாரித்து விற்பதால் எப்போதும் Profit மட்டும் தான்….
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |