ஐடியாக்கள் மூலம் கை நிறைய சம்பாதிக்கலாம்
வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சிறந்த வேலை ஒன்றை பற்றி காண்போம். பெண்களுக்கு இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய சம்பாத்தியம். ஆனால் உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா, உங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்வதால் ஓய்வு எடுக்கவே நேரம் இல்லையா. இதற்கெல்லாம் தீர்வாக தான் இந்த பதிவு, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்தால் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளலாம் நீங்கள் சுயமாக சம்பாரித்த மாதிரியும் இருக்கும். அதற்கு ஏற்ற தொழில் தான் interior Designer. வாருங்கள் இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Interior designer தொழிலை வெற்றிகரமாக நடத்த இதை செய்தல் போதும்
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் என அனைத்தையும் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்களை அழகாக வடிவமைக்க விரும்புகின்றன. ஆக இந்த Interior and Exterior Design தொழில் மிகவும் பிரபலமான தொழிலாக இப்பொழுது உள்ளது. மேலும் இந்த தொழில் தற்போது சந்தைகளில் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கிறது. ஆக நீங்கள் நல்ல அனுபவத்துடன் இந்த தொழிலை தொடங்கினாள் நல்ல வருமானத்தை பெற முடியும். இதற்கான வகுப்புகள் நிறைய இருந்தாலும் பெண்களுக்கு சாதாரணமாகவே கலை உணர்வு அதிகம் அதனால் அவர்களால் இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.
வீட்டிலிருந்தே 3 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 22,500 சம்பாதிக்கலாம்…
Interior design business plan
நீங்கள் தொழிலை மிக பெரிதாக ஆரம்பிக்க நினைத்தாலும் சரி சிறியதாக வீட்டிலே செய்தலும் சரி நீங்கள் இருக்கும் இடம் கொஞ்சம் அதிக கலை நயத்துடன் வடிவமைத்தால், அவற்றின் தோற்றமே உங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களை உருவாக்கி தரும்.
நீங்கள் சிறிய அளவில் ஆரம்பித்தால் உங்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தினரின் வீடுகளில் குறைந்த செலவில் வடிவமைத்தல் போதும் நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம்.
வீட்டின் உட்புறத்தை வடிவமைக்க இரண்டாம் தர பொருட்கள் உங்களுக்கு உதவும் இவற்றை நீங்கள் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் செலவுகளை குறைக்கலாம்.
நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் புது ஐடியாக்களை தேர்வுசெய்ய வேண்டும். அவை எப்போதும் மலிவானதாகவும் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும்.
இன்றைய கட்டத்தில் பெரும்பாலான மக்களால் அவர்களின் வீடுகளை கவனிக்க முடிவதில்லை காரணம் வேலைப்பழு. அப்படிபட்ட நபர்களை தேர்வு செய்து எளிமையாக பாதுகாப்பதற்கு தகுந்தவாறு நீங்கள் உங்கள்தொழிலை விரிவுபடுத்தலாம்.
நீங்கள் ஒரு வீட்டை உட்கட்டமைக்க தேவையான பொருட்களை உங்களுக்கு நன்கு பழக்கம் உள்ள இடங்களில் தொடர்ந்து வாங்குவதன் மூலம் விலை குறைத்துக்கொள்ளலாம். உங்களின் ஐடியாக்களுக்கு மட்டும் தான் நீங்கள் சம்பளம் வாங்கும் பட்சத்தில் இவற்றின் மூலம் பொருட்கள் வாங்குவதால் உங்களின் சேவை சிறந்து விளங்கும்.
வாடிக்கையாளர் தேர்வு:
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் செலவுத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைப்பது மிக முக்கியம். வாடிக்கையாளரிடம் உங்கள் திட்டங்களை மிக தெளிவாக விளக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்த போகும் பொருட்கள், வண்ணங்கள் மற்றும் அலங்காரங்களைத் தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது சிறந்தது.
சக தொழிலார்களாகிய பிளம்பர்கள், பொறியாளர்கள், பெயிண்டர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுடன் கலந்துஆலோசித்து உங்கள் திட்டங்களை வடிவமைத்தல் உயர் தரத்தில் உங்கள் வேலையை முடிக்கலாம்.
குறித்த நேரத்தில் வேலையை முடித்தல்: நீங்கள் திட்டமிட்ட நேரத்திற்குள் வேலைகளை முடிப்பதால் நன்மதிப்பை பெறமுடியும்.
வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவனிப்பது:
நீங்கள் செய்து முடித்த வேளைகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்போது அவற்றை நீங்கள் திறம்பட நீங்குவதால் உங்களின் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |