Unique Business Ideas For Ladies in Tamil
பெண்கள் சுயதொழில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். தொழில் செய்ய வேண்டும் என்று யோசித்தால் மட்டும் போதாது. என்ன தொழில் செய்தால் லாபம் அதிகமாக இருக்கும், எது Demand ஆக இருக்கும் என்றெல்லாம் ஆராய வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பெண்களுக்கான தொழில்:
இந்த பதிவில் சொல்ல போகின்ற தொழிலானது எப்பொழுதும் Demand உள்ள தொழில். அதாவது திருமண நடக்க போகிறது என்றால் அன்றைய நாள் தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். அதனால் நீங்கள் Beauty parlour தொழில் செய்யலாம். இல்லை என்னால் Parlour வைக்கிற அளவிற்கு முதலீடு இல்லை என்றால் இந்த பதிவில் வீட்டிலிருந்து இந்த தொழிலை செய்வது எப்படி என்று சொல்ல போகிறோம். அவை எப்படி செய்யலாம், வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டிலிருந்து தொழில் செய்வது எப்படி.?
நீங்கள் beautician course அல்லது மேக்கப் போட தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு மெஹந்தி போட தெரிந்திருக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளபவர்கள் அல்லது நண்பர்களிடம் நீங்கள் செய்யும் தொழிலை பற்றி சொல்ல வேண்டும். யாரேனும் கேட்டால் என்னை காண்டாக்ட் சொல்லும்படி சொல்ல வேண்டும்.
அதாவது எடுத்துக்காட்டாக ஒருவர் உங்களிடம் மெஹந்தி போட வேண்டும் என்று அழைக்கிறார். அப்போது நீங்கள் அவர்களிடம் என் இடத்திற்கு வர முடியுமா என்று கேளுங்கள், இல்லை என்னால் வர முடியாது என்றால் உங்கள் இடத்திற்கு நான் வருகிறேன் என்று கூறலாம்.
நீங்கள் மெஹந்தி போடும் சைஸ் மற்றும் டிசைனை பொறுத்து வருமானம் மாறுபடும்.
அடுத்து அது போல மேக்கப் போட வேண்டும் என்றால் நீங்கள் அவர்கள் இடத்திற்கு சென்று போடுகிற மாதிரி இருக்கும். இதற்கு மூலப்பொருட்களாக மேக்கப் போடுவதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் வாங்கி கொள்ளுங்கள். இவற்றை வாங்குவதற்கு 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் மெஹந்தி போடுகிறீர்கள் என்றால் 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைக்கும் வருமானம் பெற்று கொள்ளலாம்.
அதுவே மேக்கப் போடுகிறீர்கள் என்றால் 15,000 ரூபாய் 30,000 ரூபாய் வரைக்கும் பெற்று கொள்ளலாம்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |