Village Small Business Ideas in Tamil
பொதுவாக அன்றாட தேவைக்கு என்று இல்லாமல் இதர தேவைக்காகவும் நமக்கு பயன்படும் பொருளானது எப்போதும் எல்லா இடங்களிலும் கிடைக்குமா என்று கேட்டால் அது தான் கிடையாது. ஏனென்றால் நகர்ப்புறங்களில் நமக்கு தேவைப்படும் பொருள் கிடைத்து விடும். அதுவே கிராமபுரங்களை பொறுத்தவரை எப்போதும் எல்லா பொருட்களும் கிடைக்காது. ஆகையால் கிராமப்புறங்களில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் அத்தகைய பகுதிகளில் எந்த பொருள் அதிகமாக கிடைக்கிறதோ அல்லது தட்டுப்பாடு நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்று சிந்தித்து அந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல லாபம் மற்றும் வருமானது கிடைக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கிராமம் தொழில்:
கிராமங்களில் தொழில் செய்வது என்பது வருமானத்தை பல மடங்கு தரக்கூடிய ஒன்றாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு போட்டி என்பது அதிகமாக இருக்காது. அதே சமயம் ஒரு முறை மக்கள் நமது கடையில் வந்து பொருட்களை வாங்கி விட்டார்கள் என்றால் மறுமுறையும் அவர்களுக்கு அங்கேயே வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.
அப்படி பார்த்தால் மாவு மற்றும் மிளகாய் என இதுபோன்ற பொருட்களை அரைக்கும் அரவை மில் வைப்பது என்பது ஒரு நல்ல தொழிலாக இருக்கும். அதனால் இந்த தொழிலை செய்யலாம்.
தொழில் தொடங்கும் முறை:
மாவு மில் அல்லது ரைஸ் மில் வைப்பதற்கு முதலில் உங்களுக்கு முதலீடாக 1 லட்சம் ரூபாய் வரையிலும் தோராயமாக தேவைப்படும். இதற்கான இட வசதி என்பது அளவில் சற்று பெரியதாகவே இருக்கும். அதனால் அதிக இட வசதி உள்ள இடமாக பார்த்து தயார் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தொழிலை செய்ய தேவையான மிசின்கள் முதல் தேவைப்படும் ஆவணங்கள் என இவற்றையும் பார்த்து வாங்கி கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் தயார் செய்து வைத்து கொண்டு தொழிலை தொடங்கி விடலாம்.
மாத வருமானம் எவ்வளவு:
இந்த தொழில் மாதம் வருமானம் என்பது உங்களது மில்லில் அரைக்கும் பொருட்களின் அளவினை பொறுத்தே அமையக்கூடியதாக இருந்தாலும் கூட தோராயமாக மாதம் 20,000 ரூபாய் வரையிலும் ஈசியாக வருமானம் பெறலாம். அதுவே பண்டிகை காலம் என்றால் லாபம் சரமாரியாக இருக்கும்.
நீங்க கிராமத்தில் இருந்தாலும் சரி, டவுன்ல இருந்தாலும் சரி இந்த தொழிலை அடிச்சுக்க ஆளே இல்லை..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |