கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம்..!

Advertisement

கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம் | Enna Thozhil Seiyalaam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிராமத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய தொழில்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். தொழில் செய்யம்போது இடத்திற்கு ஏற்றவாறு செய்தால் என்ன நல்ல வருமானம் பெற முடியும். எனவே, அப்படி கிராமத்தில் என்ன செய்யலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

கிராமத்தில் உள்ளவர்கள் படிப்பது முதல் பொருட்களை வாங்குவது வரை எல்லாத்துக்குமே கஷ்டப்படுவார்கள். அதனாலே கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்தில் செல்கிறார்கள். ஆனால் கிராமத்தில் உள்ள பொருட்கள் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் கிராமத்தில் இருந்து கொண்டு என்ன தொழில் செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறீர்கள்  என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அது என்னென்ன தொழில் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கிராமத்தில் உள்ளவர்கள் செய்ய கூடிய தொழில்:

உங்களிடம் சுயதொழில் செய்வதற்கு முதலீடு இல்லாமல் இருக்கலாம், நிலம் இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தொழில் ஏற்றதாக இருக்கும். கிராமத்தில் சும்மா கிடைக்க பொருட்களை வைத்து தொழில் செய்யலாம். கிராமத்தில் சும்மா இருக்க கூடிய பொருட்கள் நகரம் மற்றும் வெளிநாட்டில் அதற்கான தேவை அதிகமாக இருக்கின்றது. அவை மாட்டு சாணம், வேப்ப குச்சிகள், வேப்ப பூ, முருங்கை கீரை போன்றவை இருக்கின்றது. இதனை வைத்து எப்படி தொழில் செய்யலாம் வாங்க..

கீரை தொழில்:

கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம்

முருங்கை கீரை கிராமத்தில் எளிதாக கிடைக்கும். ஆனால் நகரத்தில் அப்படியில்லை முருங்கை ஜீரை எளிதாக கிடைக்காது. அதனால் முருங்கை கீரைகளை பறித்து கழுவி விட்டு நகரத்தில் விற்பனை செய்யலாம்.

வேலையோ 2 மணி நேரம் ஆனால் வருமானமோ 6,000 ரூபாய்..!

உரம் தொழில்:

கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம்

மாட்டு சாணம் கிராமத்தில் எளிதாக கிடைக்க கூடியது. அதனால் மாட்டு சாணத்தை காய வைத்து அதனை ராட்டியாக தட்டி கொள்ளவும். இவை இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

தேங்காய் சிரட்டைகளை காய வைத்து அதனை பவுடராக செய்து கொள்ளவும். இதனை அழகு சாதன பொருட்கள், கொசுபத்தி, ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். தொழில் தொடங்கினால் போதும் லாபம் நம்மை தேடி வரும்! அருமையானது சுயதொழில்..!

வேப்ப குச்சி தொழில்:

கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம்

வேப்ப குச்சி எளிதாக கிடைப்பவர்களுக்கு அதனுடைய அருமை தெரிவதில்லை. இருந்தாலும் பலர் வேப்ப குச்சியால் பல் துலக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் வேப்ப குச்சியை சிறியதாக நறுக்கி முனையில் கொஞ்சம் நச்சி பேக்கிங் செய்து விற்பனை செய்யவும்.

8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement