Home Delivery Meal Service In Tamil
இன்றைய பதிவில் பெண்கள் வீட்டில் இருந்துகொண்டே என்ன தொழில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.பெண்கள் வீட்டில் இருந்தப்படியே அவர்களுடைய நேரம்,திறமை,முதலீடு ஆகியவற்றின் மூலம்.அதிக அளவு லாபம் பெற முடியும்.இதன் மூலம் அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொள்ள முடியும்.பெண்கள் பிஸ்னஸ் செய்வதன் மூலம் அவர்களின் வீட்டின் பொருளாதார நிலையும் உயர்கிறது.
மேலும், நாம் செய்யும் தொழிலை ஆர்வத்துடனும்,நம்பிக்கையுடனும் ,நேர்மையாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் தொழிலை செய்ய வேண்டும். உங்களின் வாடிக்கையாளர்களின் மனதை கவரும் வகையில் நீங்கள் தொழில்தொடங்கினாள், உங்களின் பிஸ்னஸ் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிடும்.அப்படி என்ன தொழில் செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க…
Home Delivery Meal Service

வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் நன்றாக தெரிந்தவராக இருந்தால் ,வீட்டிலிருந்தே வீட்டுமுறை சாப்பாடுகள் செய்து அதை ஆபீஸ் வேலைசெய்பவர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுசாப்பாடு செய்து அதை அவர்கள் இருக்கும் இடத்திற்கே டோர் டெலிவரி செய்தால் அவர்கள் உங்களின் வாடிக்கையாளராக மாறிவிடுவார்கள் மற்றும் நீங்கள் சமைக்கும் சாப்பாடு சுவையானதாகவும் ,வெரைட்டி ஆனதாவும் இருக்கவேண்டும். நீங்கள் சமைக்கும் இடம் சுத்தமாகவும், நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும். இந்த தொழிலை ஆரம்பிக்க Rs.10000 முதல் Rs.30000 வரை முதலீடு தேவைப்படும் . இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தே அதிக வருவாய் ஈட்ட முடியும்.
Home Studio Photography:

முதலில் போட்டோ ஸ்டூடியோ வைக்க மக்கள் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது வீட்டிலையே ஸ்டூடியோ வைப்பவராக இருந்தால் அதை அனைவருக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்.இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான விளம்பர தொடர்பை தான் பயன்படுத்த வேண்டும். அவை சோசியல் மீடியா, ஏரியாவில் உள்ளவர்களுக்கு மற்றும் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்ய வேண்டும்.
மேலும், நீங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ , குழந்தைகள் போட்டோ ஷூட் ,பர்த்டே போட்டோ ஷூட் மற்றும் திருமணம் போட்டோ ஷூட் ,பேபி சவர் போன்ற வற்றிற்கு புகைப்படம் எடுத்து வருமானம் ஈட்டலாம். இதற்கு கேமரா,லைட்ஸ் ,பெக்ட்ராப்ட் இன்னும் பல பொருட்களை வாங்குவற்கு முதலீடாக Rs.25000 முதல் Rs.30000 வரை செலவாக வாய்ப்புள்ளது.மற்றும் நீங்கள் போட்டோகிராபியில் சிறந்து விளங்க ட்ரைனிங் கிளாஸ் சென்று கற்றுக்கொள்ளலாம்.
வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!
Home Tuition Centre:

பெண்களுக்கு கல்வி அறிவு மற்றும் போதுமான இடம் வசதியிருந்தாலே போதும் மாதம் Rs.10000 வரை சம்பாதிக்கலாம். கல்வி திறமையை வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தபடியே டியூஷன் நடத்துவது அருமையான தொழில் ஆகும். மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள், போட்டி தேர்வு எழுதுபவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள், ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் மற்றும் கணிதம் பாடங்கள் போன்றவற்றை கற்று தருவதன் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம். இதற்கான முதலீடு மிக குறைவு நாற்காலி, புத்தகம், டேபிள் மற்றும் கரும்பலகை மட்டும் இருந்தால் போதும். உங்கள் கல்வி திறமை மூலம் அதிக மாணவர்கள் உங்களை தேடி வருவார்கள்
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














