பெண்கள் மாலை நேரத்தில் செய்ய கூடிய தொழில்
எத்தனை பிடித்த வேலையும், படித்த படிப்பிக்கேற்ற வேலையும் செய்கிறார்கள் என்றால்.? பணம் சம்பாதிப்பதற்காக ஏதோ ஒரு தொழிலை செய்து வருகின்றோம். சில பேருக்கு ஆசிரியருக்கான படிப்பை படித்திருப்பார்கள். அதன் பிறகு அரசு வேலைக்காக எக்ஸாம் எழுதுவார்கள். எக்ஸாமில் பாஸ் ஆகிற வரைக்கும் தனியார் பள்ளியில் வேலைக்கு போகலாமா என்று நினைப்பார்கள். ஆனால் தனியார் பள்ளியில் சம்பளம் குறைவாக கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தனியாரில் வேலை பார்த்தால் கூட கிடைக்காத சம்பளத்தை 2 மணி நேரத்தில் சம்பாதித்து விடலாம். அந்த தொழில் என்னவென்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
கல்வி கற்பிக்கும் தொழில்:
நாம் படிக்கும் போதெல்லாம் கொஞ்சம் படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளை தான் டியூஷனுக்கு போக சொல்வார்கள். ஆனால் இப்போது எல்லா குழந்தைகளும் டியூஷனுக்கு செல்கிறார்கள். என்ன தொழில் என்று யூகித்து இருப்பீர்கள். நீங்க நினைச்சது தாங்க.. டியூஷன் தொழிலை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதுமானது.
மூலப்பொருள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சாக்பீஸ், டஸ்டர், கரும்பலகை, பேன், லைட் போன்றவை தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 300 ரூபாய் தேவைப்படும். லைட் மற்றும் பேன் வாங்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் வீட்டிலேயே இந்த தொழிலை செய்வதால் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கும்.
தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்
தொழில் செய்யும் முறை:
இந்த தொழிலை காலை அல்லது மாலை என இரண்டு நேரங்களில் உங்களுக்கு ஏற்ற நேரங்களில் செய்யலாம். மேலும் நீங்கள் டிகிரி அல்லது 12th படித்திருந்தாலே போதுமானது.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குவீர்களோ அந்த பாடத்தை எடுக்கலாம்,அல்லது எனக்கு எல்லா பாடமும் தெரியும் என்றால் நீங்கள் எல்லாவற்றையும் எடுக்கலாம்.
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் நீங்கள் எடுக்கும் வகுப்பு மற்றும் பாடத்தை பொறுத்து மாறுபடும்.
அதவாது 1 முதல் 8-ம் வகுப்பு வரைக்கும் எடுக்கிறீர்கள் என்றால் 500 ரூபாய் வாங்கலாம்.
அதுவே 10-ம் எடுக்கிறீர்கள் வகுப்பு என்றால் 700 ரூபாய் வாங்கலாம்.
11 மற்றும் 12-ம் வகுப்புக்கு எடுக்கிறீர்கள் என்றால் 1000 ரூபாய் வாங்கலாம்.
மேல் கூறப்பட்டுள்ளவை தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே ஊருக்கு ஏற்றபடி மாறுபடும். அதனால் உங்க ஊரில் எவ்வளவு எல்லாரும் வாங்குகிறார்களோ அதன்படி பெற்று கொள்ளவும்.
உங்களிடம் 30 பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு நபருக்கு 500 ரூபாய் மாதத்திற்கு 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |