கெட்ச்அப் தயாரிப்பில் அதிரடியான லாபம்
zero inversment Business Ideas Tamil:– புதிதாக தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு எனது அன்பான வணக்கம். இந்த பொதுநலம் பதிவில் குறைந்த முதலீட்டில் லாபம் தரக்கூடிய அதுவும் யாரும் அதிகம் செய்திடாத ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதாவது Ketchup தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரது உணவு முறையிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டது. அந்த வகையில் மக்கள் உணவுகளில் அதிகளவு Ketchup பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எனவே நாம் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் தயாரித்து விற்பனை செய்யும்பொழுது நல்ல லாபம் பார்க்க முடியும். சரி வாங்க இந்த Ketchup Business Idea-ஐ பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ketchup Business Idea:
கெட்ச்அப்பின் சந்தையானது பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இவற்றின் பயன்பாடு பெரிய உணவகங்கள் முதல் சிறிய கேன்டீன்கள் வரை விரிந்துள்ளது. வீடுகளிலும் Ketchup பயன்பாடு இப்போது அதிகரித்துள்ளது.
நாம் நாட்டில் அதிகரித்து வரும் உணவு தொழில்களில் இந்த Ketchup உற்பத்தியும் ஒன்று.
ketchup வகைகள்:
தக்காளி கெட்ச்அப்
பூண்டு மற்றும் வெங்காயம் கெட்ச்அப்
இனிப்பு மற்றும் காரமான தக்காளி கெட்ச்அப்
சில்லி தக்காளி கெட்ச்அப்
ஆர்கானிக் தக்காளி கெட்ச்அப்
இப்படி பல வகைகளில் கெட்ச்அப் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
முதலீடு:
இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ₹ 2 லட்சம் முதலீடு தேவைப்படும்.
லாபம்:
இந்த கெட்ச்அப் தயாரிப்பில் மாதம் லாபம் ரூபாய் 40000 முதல் ரூபாய் 50000 வரை கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள்:
குடும்பங்கள் : அனைத்து வயதினரும் தக்காளி போன்ற கெட்ச்அப்பை பஜ்ஜி, சாண்ட்விச்கள், சப்பாத்தி ரோல்ஸ் போன்ற பல விதமான உணவுகளுடன் பயன்படுத்துகின்றார்கள்.
ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள்: ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் பர்கர்கள், பீட்சாக்களுக்கு இன்றியமையாத தேவையாக கெட்ச்அப் பயன்படுத்த படுகிறது.
செல்லப்பிராணியுடன் சேர்ந்து மாதம் 20,000 வரை சம்பாதிக்கலாம் வாங்க…
கெட்ச்அப் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:
நீங்கள் தயாரிக்க போகும் கெட்ச்அப்புக்கு தகுந்தவாறு பொருட்கள் மாறுபடும்.
- தக்காளி
- தண்ணீர்
- மசாலா
- வினிகர்
- சர்க்கரை
கெட்ச்அப் தயாரிக்கும் தொழிலில் 25% வரை லாபம் பெறலாம்.
நச்சுனு சில ஐடியா போதும் வீட்டில் இருந்தபடியே 50 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம் …
வருமானம்:
இந்த தொழிலில் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அதன் பிறகு நல்ல வரவேற்பும், முன்னேற்றமும் காணப்படும். அந்த வகையில் ஆரம்பகாலத்தில் தோராயமாக மாதம் 25,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம். அதன் பிறகு உங்களின் வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு வருமானம் அதிகரிக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |