லாபம் தரும் தொழில்
குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதே மனிதனின் ஒரே குறிக்கோள். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை தேடி அலைவதை விட ஒரு நடுத்தர சுயதொழிலை தேர்வு செய்ய சிந்திக்க வேண்டியாது அவசியமாக உள்ளது. அத்தகைய சுயதொழிலுக்கு பெரிய படிப்பு அவசியம் இல்லை. முன்னேரவேண்டும் என்ற எண்ணமும் கடினமுயற்சியும் போதும். அத்தகைய கடின முயற்சி கொண்ட அனைவரும் பணம் சம்பாதிக்க மகிழ்ச்சியாக சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்க ஒரு தொழில் வேண்டும். அதுவும் நாம் தேர்தெடுக்கும் தொழில் நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவேண்டும். நீங்கள் தேர்தெடுக்கும் தொழில் சந்தையில் நல்ல சூழல் இருக்க வேண்டும். இப்படி பல காரணிகளை சார்ந்து நாம் தொழிலை தொடங்க வேண்டும். அத்தகைய ஒரு தொழிலை பற்றித்தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை, வாருங்கள் அந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது, அந்த தொழிலை வெற்றிகரமாக எவ்வாறு மாற்றுவது, தொழிலை தொடங்க எவ்வளவு செலவுகள் ஆகும் போன்ற காரணிகளை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
லாபம்தரும் தொழில்களில் இதுவும் ஒன்று:
பொம்மைகள் குழந்தைப் பருவத்தின் ஒரு அங்கம் இதனை யாராலும் மறுக்கமுடியாது. பொம்மைகள் குழந்தைகளை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கற்பனை திறனையும் வளர்க்க உதவுகின்றது.
குழந்தை பருவத்தில் பொம்மைகளின் இடத்தை வேறு எந்த நபராலும் நிரப்பமுடியாது. அதனால் தான் பொம்மை தயாரிப்பு பல ஆண்டுகளாக ஒரு சிறந்த தொழிலாக உள்ளது.
நீங்கள் ஒரு பொம்மை உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலை தொடங்க நினைத்தால், கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு ஒரு சிறந்த வருவாயை தரக்கூடியதாக இருக்கும்.
பொம்மைகள் உற்பத்தி மற்றும் விற்பனை:
பொம்மை உற்பத்தியை பொறுத்தவரை, பல விதமான மெஷின்கள் இருந்தாலும், கைகள் மூலமாக தயாரிக்கும் பொம்மைகளுக்கு இப்போது சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. சிறிய பொம்மைகளுக்கு கை மூலமாகவே தையல் செய்யலாம். பெரிய பொம்மைகளை தயார் செய்வதற்கு மட்டும் தையல் மெஷின் மூலம் தைக்க வேண்டியதாக இருக்கும்.
நீங்கள் உருவாக்கும் பொம்மைகள் பல விதமான பொம்மைகளை உருவாக்கலாம். ஒரே மாதிரியான பொம்மைகள் உங்களின் விற்பனையை குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பல நிறங்களில் ப வடிவத்தில் நீங்கள் பொம்மைகளை உருவாக்கலாம்.
சந்தையில் எந்த வகையான பொம்மைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கள ஆய்வு செய்து அதன் மூலம் நீங்கள் உருவாக்கும் வடிவத்தை தேர்வு செய்யலாம்.
பொம்மை உற்பத்தி தொழிலை தொடங்க தேவையான பொருட்கள்:
வீட்டின் ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. சார்ட் பேப்பர் (chart paper), வெல்வெட் துணி, துணிகளை வெட்ட ஒரு டேபிள் (ரூ.4,000/-), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (Rs.5,000/-), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650/- கிட்டத்தட்ட இந்த குடிசை தொழிலை துவங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படும்.
ஃபர் கிளாத் (Fur cloth), அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.400 முதல் ரூ.450 வரை இப்போது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது அங்கு ஆர்டர் செய்து இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
செயற்கை பஞ்சு ( Fiber cotton / பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர் கிளாத், ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் தயார் செய்யலாம்).
சிறிய பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய பொம்மை செய்ய ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம்.
உற்பத்தி செலவு :
ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800/- மாதம் 25 நாளில் 1000 சிறிய பொம்மை அல்லது 500 பெரிய பொம்மை வித விதமாக மற்றும் புதுமையாகவும், கலைநயத்துடனும் தயார் செய்ய உற்பத்தி செலவு ரூ.20,000/- தேவைப்படும்.
விலை நிர்ணயம்:
சிறிய பொம்மைகளை ரூ.100-க்கும், பெரிய பொம்மைகளை ரூ.150-க்கும் விற்பனை செய்யலாம். கலைநயத்துடன் தயார் செய்த சிறிய மற்றும் பெரிய பொம்மைகளுக்கு தனி விலையை நிர்ணகித்து விற்பனை செய்யலாம்.
லாபம்:
இதன் மூலம் மாதம் 40,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலம்.மாத வருமானம் ரூ.40,000-யில் உற்பத்தி செலவு போக 10,000/- போக லாபமாக 30,000/- கிடைக்கும்.
இந்திய அரசு ” Made in India ” பிரச்சாரத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி மற்றும் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஊக்கமளிக்கிறது. ஆகவே இந்த தொழில் உங்களின் சுய தொழில் ஆரம்பிக்கும் கனவுக்கு சிறந்த தொழிலாக இருக்கும்.
செல்லப்பிராணியுடன் சேர்ந்து மாதம் 20,000 வரை சம்பாதிக்கலாம் வாங்க…
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |
நிறைவான வருமானம் நிலையான தொழில்