Zero Investment Business Idea
பெரும்பான மக்கள் இப்போது சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளனர். சம்பளத்திற்கு வேலைபார்ப்பதைவிட தங்களே சுயமாக சம்பாதிக்க துடிக்கும் தலைமுறையினர் இன்றைய தலைமுறையினர். சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட் போட்டு அல்லாடுவதைவிட, சொந்தமாக ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்றும், புதிய யுத்திகளை செயல்படுத்தி ஒரு புதிய பாதையை உருவாக்கலாம் என்றும் என்னும் பலர் இருக்கின்றனர். என்னதான் தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும், அந்த நேரத்தில் தடையாக இருப்பது முதலீடுகள் தான். நாம் செய்யும் தொழில் லாபமிக்கதாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான முதலீடும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு தொழிலை தான் மக்கள் தேடுகின்றனர். அப்படி குறைவான முதலீட்டில் தொழில் தொடங்க எண்ணுபவருக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
ஊறுகாய் தொழில்:
ஊறுகாய் இப்போதைய மக்கள் அதிகம் விரும்பும் ஒரு விஷயமாக உள்ளது. நம்மில் அதிகபேர் என்னதான் நிறைய உணவு வகைகள் இருந்தாலும் நாம் தேடுவது புளிப்பு சுவையுடையன் காரசாரமான ஊறுகாய்யை தான். ஊறுகாய் இருந்தால் போதும் நமக்கு அனைத்துவகையான உணவுகளும் சாப்பிட போதுமானதாக இருக்கும். என்னதான் ஊறுகாய் எல்லாருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாக இருந்தாலும், அதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் சுவை நமக்கு பிடிப்பது இல்லை. நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பக்குவம் நமக்கு வருவதில்லை. அப்படி சுவையாக செய்தலும் சில நாட்களிலே அது கெட்டுவிடும்.
இந்த காரணிகள் தான் உங்களின் தொழிலுக்கு அடித்தளமாக இருக்கும். மக்கள் விரும்பும் சுவையை பெற நவீன முறையுடன், வீட்டு பாணியில் ஊறுகாய்களை தயாரித்து வழங்குவதால் அதிக லாபம் பெறலாம்.
இடம்:
இந்த ஊறுகாய் தொழிலை தொடங்குவதற்கு குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும். உங்கள் வீட்டிலே நீங்கள் உங்கள் தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்யலாம்.
முதலீடு:
ஊறுகாய் தயாரிப்பிற்கான மூல பொருட்களை வாங்க அதிகபட்சம் 5,000 வரை தேவைப்படலாம்.
தயாரித்த ஊறுகாய்களை சேமிக்க உங்களுக்கு கண்ணாடி பாட்டில் தேவைப்படும். கண்ணாடி பாட்டில்கள் பாதுகாப்பானது.
இல்யென்றால் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கவர்களில் அடைத்து விற்கலாம்.
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயாரித்த ஊறுகாய்களை அருகில் உள்ள கடைகளில் கொடுத்து விற்பனை செய்யலாம். இப்போது சமூக வலைத்தளம் நல்ல சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. அதன் மூலமும் உங்கள் தயாரிப்பை விற்கலாம்.
குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து வருமானத்திற்கு ஏற்ப தொழிலை விரிவுபடுத்தலாம்.
உங்களின் தயாரிப்பு வாடிக்கையாளருக்கு பிடிக்கவும், தரமானதாகவும் இருந்தால் உங்களின் வியாபாரம் நல்ல முறையில் முன்னேறும்.
வருமானம்:
முதலில் ரூபாய் 5,000 முதலீட்டில் ஆரம்பித்து, முதல் மாத முடிவில் குறைந்தது 15,000 வரை லாபம் பார்க்கலாம்.
உங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்த FSSAI உரிமம் பெறுவது சிறந்தது. இந்த உரிமை உங்களில் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.
குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் தரக்கூடிய EverGreen Business……
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |