சுய தொழில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தினை இப்போதைக்கு உள்ள நிலைமையினை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆன்லைன் காலம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் கடைக்கு நேராக சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நாம் அனைவரும் வீட்டில் இருந்த படியே எந்த விதமான அலைச்சல் இல்லாமலும் வாங்கி கொள்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே இதை எதற்கு நான் இப்போது கூறுகிறேன் தெரியுமா..? ஏனென்றால் இதனை அடிப்படையாக வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் அது என்ன தொழில் அதனை எப்படி செய்வது என்ற முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் தொடங்கலாம்…..?
என்ன தொழில் :
ஆன்லைன் ஃபேஷன் boutique உருவாக்கலாம்.
உங்களுக்கு ஃபேஷனில் அதிக ஆர்வம் இருந்தால் இந்த தொழில் உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும். 2024 ஆம் ஆண்டுக்குள் ஆடைத் தொழில் 153 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் குறிக்கின்றது.
அதனால் நீங்கள் அனைவரும் விரும்பும் பொருட்களை உங்களுக்கு என்று ஒரு தளத்தை உருவாக்கி விற்பனை செய்யலாம்.
உங்களால் புதிய வடிவத்தை உருவாக்க முடியவில்லை என்றால் கவலை பட வேண்டியது இல்லை மக்கள் அதிகம் விரும்பும் வடிவங்களை மற்ற தளங்களில் வாங்கி உங்கள் தளத்தில் நீங்கள் விற்கலாம். நீங்கள் உங்களுக்கு என்று கூகுளை உதவியுடன் தளத்தை உருவாக்கலாம் அல்லது whatapp மற்றும் facebook குழுக்கள் மூலம் இருந்த இடத்திலிருந்தே விற்கலாம்.
உங்களுக்கு ஆடைகள் மீது விருப்பமில்லை என்றால் பெண் காலணிகள் நகைகள் மற்றும் கைபைகளில் கவனம் செலுத்தலாம்.
முதலீடு:
உங்களின் வாடிக்கையாளர்களை பொருத்து உங்களின் முதலீட்டை வடிவமைத்து கொள்ளலாம். நீங்கள் தேர்தெடுக்கும் துணைகளின் தரத்தை பொறுத்து உங்களின் முதலீடு வேறுபடும். உங்களுக்கு தனியாக கடை அரமிக்க வேண்டும் என்றால் ஆரம்பிக்கலாம். இல்லை ஆன்லைன் வர்த்தகம் மட்டும் தான் என்றால் உங்களுக்கு இடம் தேவையில்லை உங்கள் வீட்டின் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தொழிலுக்கு அதிகபட்சசம் 50,000 வரை தேவைப்படும். நீங்கள் கடை ஆரம்பிக்க இருந்தால் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வைத்தால் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
லாபம்:
உங்களின் வடிவங்கள் வாடிக்கையாளரை திருப்பிதிபடும்தும்படி இருந்தால் மாதம் ரூபாய் 15,000 முதல் 25,000 வரை சம்பாதிக்கலாம்.
வீட்டிலிருந்தே 3 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 22,500 சம்பாதிக்கலாம்…
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |