முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு 7 பெஸ்ட் கார்கள்
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சைக்கிளில் செல்பவருக்கு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பைக் வைத்திருப்பவருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. புதிதாக நீங்கள் ஏதும் வாங்குவதாக இருந்தால் அதனை பற்றிய விபரங்களை தெரிந்தவர்களிடம் கேட்பீர்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாரிடமும் போன் உள்ளது. அதனால் போனிலே தனக்கு தெரியாத விஷயங்களை பதிவிட்டு தெரிந்து கொள்கின்றர். அந்த வகையில் நீங்கள் முதல் முறையாக கார் வாங்க போகிறீர்கள் ஆனால் உங்களுக்கு கார்களை பற்றிய விபரங்கள் தெரியவில்லை என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் 7 பெஸ்ட் கார்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹோண்டா அமேஸ் கார்:
ஹோண்டா அமேஸ் காரானது நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கும். இந்த காரை வாங்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் வாரண்டி வழங்குகிறது. இந்த காரின் ஆரம்ப விலையாக 7.05 லட்சம் உள்ளது. இதில் டூயல் ஏர்பேக்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளது. அமேஸ் மைலேஜ் லிட்டருக்கு 18.3 முதல் 18.6 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.
காரில் ஏசியை போட்டதும் இந்த பட்டனையும் ஆன் பண்ணனுமாம்..! இது உங்களுக்கு தெரியுமா..?
Mahindra XUV300:
Mahindra XUV300 காரானது குறைந்த விலையில் நிறைய வசதிகளை தனக்குள் கொண்டுள்ளது. மேலும் இதில் at மற்றும் mt கியர் பாக்ஸ் வசதிகளை கொண்டுள்ளது. இதனுடைய விலை 8.42 லட்சமாக இருக்கிறது. XUV300 மைலேஜ் 16.5 முதல் 20.1 kmpl மைலேஜ் தருகிறது.
ரெனால்ட் க்விட் கார்:
இந்த காரனது ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிக்கிள் தோற்றத்தை உடையதாக இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலையாக 4.7 லட்சமாக இருக்கிறது. டூயல் ஏர்பேக்ஸ், 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் இருக்கிறது. Renault Kwid கார் 21.46 முதல் 22.3 மைலேஜ் கொடுக்கிறது.
டாடா டியாகோ கார்:
டாடா டியாகோ காரில் ஐந்து நபர்கள் உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5.6 லட்சத்திலுருந்து கிடைக்கிறது. ஃபிளேம் ரெட், பியர்லெசென்ட் ஒயிட், கிரேபோன்ற மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி வேகன் ஆர்:
மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் எகிஷோரும் விலையாக 5.52 லட்சம். இந்த கார் 9 நிறங்களில் கிடைக்கிறது. 32 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் வருகிறது.
Maruti Suzukis Presso:
maruti suzuki s presso காரை 4.27 லட்சம் ரம்பா விலையாக இருக்கிறது. இந்த காரில் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, டூயல் ஏர்பேக்ஸ், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளது.
Hyundai Grand ஐ10 Nios:
இந்த காரின் விலையாக 5.73 லட்சமாக இருக்கிறது. இந்த காரில் டூயல் ஏர்பேக்ஸ், EBD வித் ABS, ரியர் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars |