5 லட்சத்திற்குள் தரமான 5 கார்கள்

Best Cars Under 5 Lakhs India Tamil

5 லட்சத்திற்குள் தரமான 5 கார்கள் – Best Cars Under 5 Lakhs India Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும் 5 காரின் விலை மற்றும் அது குறித்த சில தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம். நீங்கள் 5 லட்சம் ரூபாயில் கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  சரி வாங்க அந்த ஐந்து காரின் விவரங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு வரப்போகும் இந்த Citroen Ec3 கார் பற்றி தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Maruti Alto 800:

இந்த Maruti Alto 800 காரின் விலை 3.77 லட்சம் முதல் 5.01 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு வகைகளிலும் உள்ளதாம். CNG காரின் விலை 5 லட்சத்திற்கும் மேல் இருக்குமாம். மேலும் இவற்றில் F8D Petrol Engine-ஐ  இந்த காரில் பயன்படுத்தியுள்ளனர். மைலேஜ் பொறுத்தவரை இந்த Maruti Alto 800 22.05 kmpl வரை செல்லக்கூடியது. இதனுடைய Length – 3445 mm, Width – 1515 mm, Height – 1475 mm ஆகும்.

Datsun Redi Go:

இந்த Datsun Redi Go காரின் ஆரம்ப விலை 4.4 லட்சம் முதல் 8.86 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரிலும் மேன்வல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு வகைகளும் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் வேண்டும் என்றால் 5 லட்சரூபாய்க்கு மேல் தான் அதனுடைய விலை இருக்கிறது. இந்த காரின் மைலேஜ் 22 kmpl ஆகும். இதனுடைய Length – 3435 mm, Width – 1574 mm, Height – 1546 mm ஆகும்.

Renault Kwid:

இந்த Renault Kwid காரை இளைஞர்கள் அதிகம் விரும்பி வாங்கும் கார் என்று சொல்லலாம். இந்த காரின் விலை 4.96 லட்சம் முதல் 6.47 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் பொறுத்தவரை 20.71 kmpl வரை செல்லக்கூடியது. இதனுடைய Length – 3731 mm, Width – 1579 mm, Height – 1474 mm ஆகும்.

Maruti s Presso:

இந்த Maruti s Presso காரின் விலை 4.96 லட்சம் முதல் 6.40 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் பொறுத்தவரை 21.4 kmpl வரை செல்லக்கூடியது. இதனுடைய Length – 3565 mm, Width – 1520 mm, Height – 1549 mm ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
டாடா நிறுவனத்தின் மிக குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா?

Datsun Go:datsun go

இந்த Datsun Go காரின் விலை 4.83 லட்சம் முதல் 7.66 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் பொறுத்தவரை 19.02 kmpl வரை செல்லக்கூடியது. இதனுடைய Length – 3788 mm, Width – 1636 mm, Height – 1507 mm ஆகும்.

மேலும் கார் மாடல்கள் மற்றும் அதனுடைய விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Cars