கார் மைலேஜ் தரவில்லையா..! அப்போ இப்படி பாருங்க..

Advertisement

கார் மைலேஜ் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்களின் வீட்டில் கார் இருக்கின்றது. ஆனால் இதற்காக போடும் பெட்ரோல் செலவு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் மைலேஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக பல முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் இதற்கு முக்கிய காரணம் காரை சரியான முறையில் பராமரித்தல் மற்றும் ஒட்டுதலில் செய்யும் தவறுகளால் மைலேஜ் குறைகிறது. அதனால் இந்த பதிவில் கார் மைலேஜ் தருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கார் மைலேஜ் தருவதற்கு என்ன செய்ய வேண்டும்:

best gear for mileage in tamil

நீங்கள் எந்த கார் வைத்திருந்தாலும், அதை நீங்கள் ஓட்டும் முறையில் தான் மைலேஜ் கொடுக்கும். மேனுவல் கியர் காரில் நீங்கள் எந்த கியரில் காரை ஒட்டுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கார் எஞ்சினில் அதிக உராய்வு ஏற்பட்டால் பெட்ரோல் அதிகமாக செலவாகும். காரில் சரியான நேரத்தில் கிளட்சை அழுத்தி கியரை மெதுவாக கியரை மாற்றுவது முக்கியமான ஒன்றாகும். அதனால் எந்த கியரில் காரை ஓட்டினால் மைலேஜ் கொடுக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பைக் வாங்க போறீங்களா.! அப்போ அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

எந்த கியரில் காரை ஓட்ட  வேண்டும்:

20 கிலோ மீட்டர் வேகத்தில் நீங்கள் காரை ஓட்டினால் 2-வது கியர் சிறந்தது. அதுவே நீங்கள் 20 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டுவேன் என்றால் 3-வது கியராய் மாற்ற வேண்டும். ஆனால் 2-வது கியரிலே வெகு தூரம் பயணித்தால் பெட்ரோல் அதிகமாகும். அதனால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 3- வது கியரை மாற்றினால் மைலேஜ் கொடுக்கும்.

30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 4-வது கியரை மாற்றி கொண்டால் தான் மைலேஜ் சிறப்பாக கொடுக்கும். அதுவே 40 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிகமாக செல்வீர்கள் என்றால் 5-வது கியருக்கு மாற்றி ஓட்ட வேண்டும்.

முக்கியமாக நீங்கள் ஒவ்வொரு முறை கியரை மாற்றும் போது ஆர்பிஎம் 1500 முதல் 2000 வரை இருக்கிறதா என்று செக் செய்வது கொள்வது நல்லது.

மேல் கூறப்பட்டுள்ளது போல் கியரை மாற்றி ஓட்டி பாருங்க சிறந்த மைலேஜ் கொடுக்கும். அதற்காக அடிக்கடி கியரை மாற்றி ஓட்டாதீர்கள்.

2023-ல் புதிதாக வந்திருக்கும் Toyota Innova Hycross கார் பற்றிய தகவல்

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

 

Advertisement