Buying a Used Car Instructions
கார் வாங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் புது கார் எல்லாரும் வாங்க முடியாது. அதனாலேயே பழைய கார் வாங்குகின்றனர். பழைய கார் வாங்கும் போது சில விஷயங்களை பார்த்து வாங்கினால் நமக்கு லாபமாக இருக்கும். அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Buying a Used Car Instructions:
Budget:
முதலில் உங்களின் வருமானத்தை மனதில் வைத்து எவ்வளவுக்கு கார் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்.
Condition:
காரின் வயது, மைலேஜ், சேதம், தேய்மானம் போன்றவற்றை அறிந்து வாங்க வேண்டும். சொல்லப்போனால் காரின் மொத்த வரலாற்றையும் அறிந்திருக்க வேண்டும். காரின் உரிமை, விபத்து போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 10 கார்களின் பட்டியல்..!
Maintenance:
கார் சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். காருக்கு எத்தனை பேர் ஓனராக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். முடிந்தவரை ஒருவரே காரை Maintain செய்திருந்தால் தாராளமாக வாங்கலாம்.
Test Drive:
காரை வாங்குவதற்கு முன் நல்ல மெக்கானிக்கை அழைத்து சென்று வாங்கினால் நல்லது. காரை ஓட்டி சோதிக்கவும், எப்படி இருக்கிறது என்று பார்க்கவும். உங்களுக்கு தெரியாத விஷயங்களை மெக்கானிக் சரியாக ஆராய்ந்து சொல்வார்.
இல்லையென்றால் (Organised inspection agency) ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தில் இருக்கும் ஆட்களை அழைத்து சென்று காரை சரியாக ஆராய்ந்து பார்க்க சொல்லலாம். அதனால் நீங்கள் வாங்கும் காரின் கண்டிஷனை பரிசோதித்து வாங்க வேண்டும்.
அதுபோல நாம் காரை வாங்கி விட்டாலும், அது சரியாக இல்லை என்றாலும் அதை 1 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விடலாம்.
ஆவணங்கள்:
காரை எடுக்க முடிவு செய்ததும் Original ஆவணங்களை வாங்கி கொள்ள வேண்டும். Rc புத்தகம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். Rc புத்தகத்தில் உள்ள தகவலையும் காரையும் வைத்து ஒப்பிட்டு சரியாக உள்ளதாக என்று பார்த்து வாங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ கார் ஓட்டும் போது எச்சரிக்கை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடுகள் என்ன சொல்கிறது..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |