கார் ஏசி பராமரிப்பு
கார்களில் பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதுவும் வெயில் காலங்களில் சுற்றுலா செல்வோம். அப்போது காரில் பயணம் செய்வோம். அதுவும் காரில் ஏசி கண்டிப்பா போட்டு செல்வோம். இந்த பதிவில் ஏசியை ஆன் செய்வதற்கு சில விஷயங்களை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அது என்ன விஷயம் என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
காரின் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும்:
மனிதர்கள் எப்படி எப்பொழுதும் பார்க்கும் வேலையை விட கொஞ்சம் அதிகமாக பார்த்தால் சோர்ந்து விடுவோம் அல்லவா.! சோர்ந்து போகும் போது நம்மை பூஸ்ட் அப் செய்வதற்கு பழம் அல்லது சத்தான உணவுகளை சாப்பிடுவோம். அது போல தான் கார்களும் 25,000 முதல் 30,000 கிலோ மீட்டர் ஓடி விட்டது என்றால் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும்.
முக்கியமாக ஏசியின் ஏர் பில்டரில் அழுக்குகள் படிந்திருக்கும். இதில் அழுக்குகள் படிந்து அப்படியே இருந்தால் நல்ல காற்றை வழங்காது. மேலும் காரின் மைலேஜையும் குறைத்து விடும். அதனால் இந்த மாதிரியெல்லாம் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏசி பில்டரை சுத்த செய்து விடவும்.பைக்கே விட மைலேஜ் தரும் கார்கள்.! இனிமேல் யாரும் பைக் வாங்க மாட்டாங்க
ஏசியை எப்போது ஆன் செய்ய வேண்டும்:
காரை ஸ்டார்ட் செய்த பிறகு தான் ஏசியை ஆன் செய்ய வேண்டும். அதே போல் காரை நிறுத்திய பிறகு ஏசியையும் ஆப் செய்திட வேண்டும்.
கார் ரொம்ப நேரம் வெயிலில் இருந்தால் உடனேயே ஏசியை ஆன் செய்ய கூடாது. முதலில் காரில் உள்ள ஜன்னல்களை திறந்து உள்பகுதியில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்ற வேண்டும். அதன் பிறகு தான் ஏசியை ஆன் செய்ய வேண்டும். ஏசியை அதிகமான வெப்பநிலையில் ஆன் செய்தவுடனே வைக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் வெப்பநிலையை அதிகப்படுத்த வேண்டும்.
ஏசி வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது:
ஏசி வேலை செய்யவில்லை என்றால் பியூஸ் பாக்ஸை ஓபன் செய்து பார்க்க வேண்டும். பியூஸ் போகிருந்தாலும் ஏசி வேலை செய்யாது.
இன்னும் 2 மாதங்களில் சந்தைக்கு வரும் பல சிறப்பம்சங்கள் கொண்ட காரை பற்றி தெரியுமா..?
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |