2023 ஆம் ஆண்டு வரப்போகும் இந்த Citroen Ec3 கார் பற்றி தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Citroen C3 Electric Car

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல ஆசைகள் இருக்கின்றன. ஒரு சிலர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதேபோல பலரும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் மூலம் கார்கள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் Citroen ec3 கார் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 வரவிருக்கும் கார் பட்டியல்..! | Upcoming Cars in India 2023 in Tamil

Citroen C3 Electric Car Information in Tamil:

Citroen Ec3 Electric Car

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான சிட்ரோன் (Citroen) இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Citroen C3 என்ற மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரனாது C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்ட முதல் மின்சார வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த Citroen EC3 கார் அதன் நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக  இருக்கிறது. இந்த கார் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்ற செய்தி நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் இது தான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மிகவும்  பிரபலமாக உள்ள சிட்ரோன் C3 காரின் Electric Version தான் இது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த Citroen EC3 Electric காரானது மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கார் விலை குறைவானதாக இருந்தாலும் இதில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!

Citroen EC3 காரின் சிறப்பம்சங்கள்: 

Citroen C3 Electric Car Information

இந்த எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. EV அதன் 29.2kWh பேட்டரி பேக்கிலிருந்து பெறுகிறது. இந்த கார் 57PS/143Nm மின்சார மோட்டாரை இயக்குகிறது.

இந்த காரின் அமைப்பு 320கிமீ வரம்பையும், 6.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கிமீ வேகத்தையும் எட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 107 கிமீ ஆகும்.

இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு DC Fast Charger -ல் 57 நிமிடங்களில் அதன் பேட்டரி சார்ஜ் 10% முதல் 80% வரை டாப்-அப் செய்ய முடியும். இந்த Citroen EC3 காரில் 3.3 kW On Board AC சார்ஜர் மற்றும் CCS2 Fast Charger என்று 2 ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

இந்த காரின் சிறப்பம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10 -இன்ச் Touchscreen Infotainment System மற்றும் Dual Airbags, ABS, Rear Parking Sensors, மற்றும் Seat Belt Reminder போன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் பட்டியல்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com