அளவை வைத்து மட்டும் இந்த புதிய காரினை எடை போட்டு விடாதீர்கள்..! அப்படி என்ன அம்சம் அந்த காரில் இருக்கிறது தெரியுமா..?

Advertisement

Upcoming Comet in India 2023

நாம் வெளியில் செல்லும் பயணமானது பெரும்பாலும் பைக், கார், பேருந்து மற்றும் ரயில் இதுபோன்றவற்றில் தான் செல்கிறோம். இவற்றில் எந்த மாதிரியான பயணம் ஏற்றதாக உள்ளது அதில் தான் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெரும்பாலான நபர்கள் சொந்தமாக பைக் மற்றும் காரினை வாங்கி அதிலும் பயணம் செய்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் கார் இல்லாத நபர்கள் கார் வாங்கி வேண்டும் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் இப்போது ஒரு நற்செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் சிறிய அளவில் மிகசிறந்த கார் ஒன்றினை MG நிறுவனமானது விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆகையால் அத்தகைய கார் பற்றிய அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

ஹோண்டா சிட்டி பஜாரில் இது புதுசு..  குறைவான விலையில் உயர்வான தரத்தில் உள்ளது.. 

Comet Car சிறப்பு அம்சங்கள்:

 upcoming comet in india 2023 in tamil

MG நிறுவனமானது ஆனது Comet என்ற எலக்ட்ரானிக் காரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அத்தகைய கார் ஆனது எலக்ட்ரானிக் காராக இருப்பதால் சார்ஜ் போட வேண்டியது மிகவும் அவசியம்.

அதுபோல காரில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரியில் Full சார்ஜ் இருந்தால் அது 150 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.

இத்தகைய காரில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது Lithium Iron Phosphate என்ற வகையினை சேர்ந்ததாகும். மேலும் இதில் 50 kW திறன் மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Comet காரில் உள்ள 10.25 Duim டிஜிட்டல் திரையினை MG நிறுவனம் வழங்கியுள்ளது. அதுபோல இந்த டிஜிட்டல் திரை Instrument Cluster ஆகவும் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படுகிறது.

அளவில் சிறியதாக இருந்தாலும் கூட இந்த Comet கார் ஒரு AC கார் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய AC-யினை குளிரவைப்பதற்கு ஒரு கேபிளும் பொறுத்தப்பட்டுள்ளது என்று MG நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த காரினை இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளது. அதேபோல இதனையுடைய விலை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தோராயமாக 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comet Car Color:

  • பச்சை
  • மஞ்சள்
  • வெள்ளை
  • பின்க்
  • நீலம்

மேலே சொல்லப்பட்டுள்ள நிறங்களில் Comet கார் வரவுள்ளது. இந்த கார் ஆனது மக்களின் மத்தியில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல் 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement