மாருதி நிறுவனத்தின் புதிய கார்: உச்சத்தை தொட்டது இதனின் டிமாண்ட்..!

Advertisement

Fronx Car by Maruti Suzuki in India

புதிதாக கார் வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்நாள் கனவாக இருக்கும். அதிலும் சிலர் புதிதாக வந்திருக்கும் காரினை வணங்குவார்கள். மற்ற சிலர் இதற்கு எதிர்மறையாக புதிதாக ஒரு கார் வருகிறது என்றால் அதனின் பார்வை மற்றும் டிமாண்ட் எந்த அளவிற்கு மார்க்கெட்டில் பேசப்படுகிறது என்பதை அறிந்த பிறகே வாங்க வேண்டும் என்று நினைப்பவராக காணப்படுவார்கள். அந்த வகையில் இரண்டாவது வகையில் உள்ளவர்களுக்கு என்று மாருதி சுசுகி கார் நிறுவனம் ஒரு அட்டகாசமான காரை அறிமுகம் செய்து தற்போது இந்தியாவிலே மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆகையால் இந்த காரின் விலை முதல் மற்ற அனைத்தினையும் விரிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Fronx Car Details in Tamil:

மாருதி சுசுகி நிறுவனம் Fronx என்ற காரை 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முதலில் ஆட்டோ எக்ஸ்போவில் இதனை மக்களுக்கு வெளிப்படுத்தியது. அதோடு மட்டும் இல்லாமல் இதற்கான புக்கிங்கையும் செய்யலாம் என்று அறிவித்து இருந்தது.

இதனை தொடந்து 2 1/2 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஏப்ரல் மாதம் இதனை அறிமுகமும் செய்தது. ஆரம்பத்தில் இந்த காருக்கு சரியான எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் கூட அதன் பிறகு Tata Punch மற்றும் Tata Nexon ஆகிய காரினை விட முன்னுக்கு வர ஆரம்பித்தது.

fronx car colours in tamil

மேலும் இந்த Fronx கார் மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். அதேபோல் இதனின் எடை என்பது மிகவும் குறைவாக தான் இருக்கிறது.

இந்த காரில் 5 நபர்கள் தாராளமாக பயணம் செய்யலாம். Fronx கார் 7.47 லட்சம் ரூபாய் முதல் 13.14 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Fronx கார் குறிப்பாக கடந்த மாதம் ஆகிய ஜூலை மாதத்தில் மட்டும் 13,220 கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

நிறம் மற்றும் இதர விவரம்:

Arctic White, Earthen Brown, Opulent Red, Grandeur Grey, Opulent Red with Black roof, Earthen Brown with Black roof, Splendid Silver, Splendid Silver With Black roof மற்றும் Nexa Blue என 9 வகையான நிறங்களில் வருகிறது.

  • Petrol Type
  • 20.01 – 28.51 km/l மைலேஜ்
  • 1197 cc, 998 cc என்பது இன்ஜினின் அளவு ஆகும்
  • பெட்ரோல் டேங்கில் மொத்தம் 37 லிட்டர் பெட்ரோல் நிரப்ப முடியும்.

ஆகவே இந்த Fronx அதிகமான டிமாண்டினை கொண்டிருப்பதால் இதனை மக்கள் பெரும்பாலும் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள்.

என்ன கார் வாங்குவது என்று தெரியவில்லையா.. அப்போ இந்த கார்கள் உங்களுக்கு தான்..

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars 
Advertisement