Hyundai Exter Car Specifications
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும்.அதில் நடந்து செல்பவர்கள் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சைக்கிள் வைத்திருப்பவர்கள் பைக் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள், பைக் வைத்திருப்பவர்கள் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஆசை பல இருக்கும். சில பேர் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால் எந்த மாதிரியான கார்களை வாங்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் ஹூண்டாய் நிறுவனத்தின் காரை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Hyundai குறிக்கோள்:
பிரபலமான நிறுவனங்களில் Hyundai நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமானது குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த ஆண்டு 2023-ம் ஆண்டு 6 கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறது.
இந்த நிறுவனம் ஆனது கடந்த ஆண்டு 5.5 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதனால் இந்த ஆண்டு 6 லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா, வெனியூ போன்றவை விற்பனையை அசத்தி வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா ஆனது மாதந்தோறும் 12,000 மேற்பட்ட கார்கள் விற்பனை ஆகின்றது, ஹூண்டாய் வெனியூ ஆனது மாதத்திற்கு 10,000 மேற்பட்ட கார்கள் விற்பனை ஆகின்றது, அடுத்து ஹூண்டாய் எக்ஸ்டர் இணைந்துள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் எப்போது அறிமுகமானது:
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் ஆனது கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு இந்த கார் ஆனது மாத்திற்கு 8000 கார்கள் விற்பனை ஆகின்றது. இதனுடைய ஆரம்ப விலை லட்சமாக உள்ளது.
இந்த கார் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டு 5 மாதங்களே இன்னும் ஆகவில்லை, இருந்தாலும் இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்திய சாலைக்கு ஏற்ற EV கார் TATA Nexon EV நமது பட்ஜெட் விலையில்
ஹூண்டாய் எக்ஸ்டர் விவரம்:
ஹூண்டாய் எக்ஸ்டரில் 1 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1 சிஎன்ஜி எஞ்சின் உள்ளது. பெட்ரோல் இன்ஜின் 1197 சிசி, சிஎன்ஜி இன்ஜின் 1197 சிசி. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. மாறுபாடு மற்றும் எரிபொருள் வகையைப் பொறுத்து எக்ஸ்டெர் மைலேஜ் 19.2 kmpl முதல் 27.1 km/kg வரை கொடுக்கும். எக்ஸ்டர் 5 இருக்கைகள் கொண்ட 4 சிலிண்டர் உள்ளது. கார் மற்றும் நீளம் 3815, அகலம் 1710 மற்றும் வீல்பேஸ் 2450 உடன் இருக்கிறது.
முக்கிய விவரம்:
மைலேஜ் | 19.2 kmpl |
எஞ்சின் இடமாற்றம் (சிசி) | 1197 |
சீட் | 5 |
சிலிண்டர் | 4 |
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |