37 லிட்டர் வரை பெட்ரோல் அளவு கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கார் பற்றிய விவரம்..!

Hyundai Grand i10 Nios Specifications 

பொதுவாக வெளியில் செல்ல வேண்டும் என்றால் நமக்குள்ளே ஒரு ஆனந்தம் வரும். ஏனென்றால் நீண்ட தூரம் வரை பயணம் செய்யலாம் என்பதே ஒரு காரணமாக இருக்கிறது. இவ்வாறு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக பைக்கில் பயணம் செய்ய முடியாது. அப்படி என்றால் கண்டிப்பாக கார் தான் வேண்டும். இத்தகைய நிலையினை கருத்தில் கொண்டே பல நபர்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கார் வாங்க வேண்டும் என்பது நியமானதாக இருந்தாலுமே கூட ஏதோ ஒரு காரினை வாங்கி விட முடியாது. ஆகவே ஒரு கார் வாங்க போகிறோம் என்றால் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்த பிறகே வாங்க வேண்டும். அந்த வகையில் இன்று ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பற்றிய விவரங்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் சிறப்பு:

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் ஆனது 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஆனது குடும்பத்துடன் பயணம் செய்ய ஏற்ற ஒன்றாக இருப்பதனால் மார்க்கெட்டில் வளம் வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதன் படி பார்க்கையில் இந்த காரில் 5 நபர்கள் வரை தாராளமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் இதில் 4 ஏர்பேக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.

இதர முக்கிய விவரங்கள்:

hyundai grand i10 nios specifications

 • இந்த காரில் 1 பெட்ரோல் எஞ்சினும் மற்றும் 1 சிஎன்ஜி எஞ்சினும் உள்ளது. மேலும் பெட்ரோல் இன்ஜின் 1197 சிசி, சிஎன்ஜி இன்ஜின் 1197 சிசி கிடைக்கிறது.
 • இதில் 15 இன்ச் அலாய் வீல்களும், தானியங்கி காலநிலை கட்டுப்பாடும் அமைக்கப்பட்டுள்ளது.
 • அதோடு மட்டும் இல்லாமல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது.
 • மக்கள் விரும்பக்கூடிய இந்த கார் பெட்ரோல் நிரப்பக்கூடியதாகவும், 37 லிட்டர் வரை கொள்ளளவு பெட்ரோல் பிடிக்கும் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
 • மேலும் சிஎன்ஜி முறையில் உள்ள எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

காரின் வடிவமைப்பு:

5 நபர்களுக்குக்கான இருக்கையுடன் கூடிய இந்த கார் 4 டோர்களையும், 3815 மி.மீ நீளத்தினையும், 1680 மி.மீ அகலத்தினையும் கொண்டிருக்கிறது. அதேபோல் கர்ப் எடையாக இதில் 930 கிலோ அமைக்கப்பட்டுள்ளது.

6 வகையான வண்ணங்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்:

 • Polar White
 • Fiery Red
 • Titan Grey
 • Spark Green
 • Typhoon Silver
 • Teal Blue

விலை எவ்வளவு:

இப்படிப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த கார் ஆனது தற்போது தோராயமாக 5,00,000 ரூபாய் முதல் 8,00,000 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.

இந்த கார் அறிமுகமான 4 மாதத்தில் ஆர்டர் பிச்சுக்கிட்டு போகுது..

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil