இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட Mahindra XUV 400 காரின் சிறப்பம்சங்கள்..!

Mahindra XUV 400 Electric Car

மனிதநாக பிறந்த அனைவருக்குமே பல விதமான ஆசைகள், கனவுகள் இருக்கும். அப்படி இருக்கக் கூடிய ஆசைகளில் ஓன்று தான் கார் வாங்குவது. சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. நாம் என்ன கார் வாங்க போகிறோமோ அதை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் பொதுநலம்.காம் பதிவில் கார் பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அதுபோல இன்று Mahindra XUV 400 காரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mahindra XUV 400 Electric Review in Tamil:

Mahindra XUV 400 Electric Car

இந்த மஹிந்திரா XUV காரானது 2023 இல் ஜனவரி 16 திங்கட்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் அறிமுக விலை தோராயமாக ரூ.15.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் 20,000 யூனிட்களை சந்தைக்கு வந்த முதல் வருடத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த காரானது EC மற்றும் EL என்று இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த Mahindra XUV கார் Tata Nexon EV -க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த XUV 400 இன் ஒட்டுமொத்த வெளிப்புற Silhouette வடிவமைப்பு அதன் பெட்ரோல் எண்ணான XUV 400 -இலிருந்து தொடங்குகிறது. இந்த வாகனம் ஒரு தனித்துவமான மூடிய Grille -யை காட்சிப்படுத்துகிறது. இந்த காரின் இரு முனைகளிலும் ஹெட்லைட்கள் உள்ளன.

வெளிப்புறத்தைப் போலவே, இந்த காரின் உட்புறமும் XUV 400 இல் உள்ள அதே கவனத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வழக்கமான மாடலில் இருக்கும் 7 –இன்ச் யூனிட்டை விட பெரிய அளவிலான Infotainment திரையை இந்த காரில் பொருத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. தரை பேனலில் சிறிய மாற்றங்களுடன் பேட்டரி பேக்கிற்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 இல் மே மாதம் அறிமுகமாகும் Nissan X Trail காரின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Mahindra XUV காரின் சிறப்பம்சம்:

Mahindra XUV காரின் சிறப்பம்சம்

இது ஒரு எலக்ட்ரிக் காராக இருப்பதால், 130 bhp மின்சார மோட்டாரால் இயக்கப்படும். இது முன் சக்கரங்களை இயக்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்ட 40 kWh பேட்டரி பேக்கிலிருந்து இந்த மோட்டார் அதன் சக்தியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பேட்டரி உற்பத்தியாளரான LG Chem மூலம் இந்திய பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேட்டரி செல்களைக் கொண்ட முதல் மின்சார கார் இதுவாக இருக்கும் என்று மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்க மஹிந்திரா நிறுவனத்துடன் ஒத்துழைத்துள்ளது.

இந்த காரில் Sunroof, Rain – Sensing Wiper, Dual – Zone Auto Climate Control, Petrol Counterpart, Multiple Airbags, Cornering Brake Control, Anti – Brake System, Electronic Brake போன்றவை இதன் அம்சங்களாக இருக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!

2023-ல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் Tata Punch EV கார் பற்றிய சிறப்பு அம்சங்கள்…!

 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil