Maruti Suzuki Fronx Car
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் பல சிறப்பம்சங்களை கொண்ட காரை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கிறது. அப்படி இருக்கும் ஆசைகளில் கார் வாங்குவதும் ஓன்று. உண்மை தான் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவும் ஆசையாகவும் இருக்கிறது. சரி கார் வாங்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் போதாது. கார் வாங்குவதற்கு முன் அந்த அந்த கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இன்று மாருதி சுசுகி பிரான்ஸ் கார் பற்றிய தகவல்களையும் அதன் சிறப்பம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஹோண்டா சிட்டி பஜாரில் இது புதுசு குறைவான விலையில் உயர்வான தரத்தில் உள்ளது |
Maruti Suzuki Fronx Car Review in Tamil:
மாருதி நிறுவனம் அதன் Suzuki Fronx SUV -யை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிட்டது. Fronx ஆனது பலேனோவை அடிப்படையாகக் கொண்ட கார் ஆகும். ஆனால் அதன் ஹேட்ச்பேக் உடன் ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது.
Fronx மாருதியின் SUV மற்றும் கிராஸ்ஓவர் வரிசையின் ஒரு பகுதியாகும். எனவே இயற்கையாகவே அது அதன் அடிப்படையிலான பலேனோவை விட கணிசமானதாக தோற்றமளிக்க அனைத்து புட்ச் டிசைன் பொருட்களையும் இந்த கார் பெற்றுள்ளது.
மேலும் பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த கார் மே மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருவதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த காரின் ஆரம்ப விலை தோராயமாக 8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும் பல வண்ணங்களில் வருவதாகவும் கூறியுள்ளது.
கார் வாங்கியே ஆகணும் அப்படிங்குற ஆசையை அதிகப்படுத்தும் புதிய கார்ஸ் அறிமுகமா |
Suzuki Fronx காரின் சிறப்பம்சங்கள்:
காரின் உள்ளே நுழைந்தவுடன், ஸ்டீயரிங் வீல், டயல்கள், சென்டர் கன்சோல் மற்றும் இருக்கைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் Sigma, Delta, Delta+, Zeta மற்றும் Alpha உள்ளிட்ட ஐந்து வகைகள் உள்ளன.
அம்சங்களைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த வேரியண்ட்டை தேர்வு செய்தாலும் Dual Airbags, ESP, Hill Hold Assist, Reverse Parking Sensors, Rear Defogger, Keyless Entry மற்றும் பின்புற இருக்கைக்கு 60:40 பிரிப்பு, முன் மற்றும் பின் பவர் ஜன்னல்கள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் ஒரு பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் தரமாக உள்ளது.
மேலும் இந்த காரில் Turn-By-Turn Navigation,360 View Camera, Wireless Charger, Cruise Control, 16-inch Dual-Tone Alloy Wheels மற்றும் 9 இன்ச் ஸ்கிரீனுடன் கூடிய அம்சம் ஏற்றப்பட்ட Infotainment System, வயர்லெஸ் ஆப்பிள் CarPlay மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றுடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளது.
மேலும் பல சிறப்பம்சங்களை இந்த மாருதி சுசுகி பிரான்ஸ் கார் கொண்டு வருகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |