Maruti Suzuki FRONX Details in Tamil
பொதுவாக அனைவருக்குமே உள்ள பல ஆசைகளில் ஒரு பொதுவான ஆசையென்றால் அது தனக்கென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு தங்களின் பட்ஜெட்டில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக தான் Maruti Suzuki தனது புதிய மாடல் FRONX காரை அறிமுகப்படுத்த உள்ளது. அதனால் இன்றைய பதிவில் இந்த Maruti Suzuki FRONX காரை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். அதாவது அதனுடைய சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Maruti Suzuki Fronx Launch Date in India:
Maruti Suzuki Fronx காரானது பல சிறப்பம்சங்களை தனக்குள் கொண்டுள்ளது. இந்த கார் நம், இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Maruti Suzuki Fronx Information in Tamil:
பொதுவாக இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். அதனால் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு (SUV) ரக கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அதுபோல தான் ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய (SUV) ரக காரான Maruti Suzuki Fronx-வை பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023-ஆம் ஆண்டு புதிதாக வெளியாக உள்ள Mahindra Thar 5-Door Car-ன் சிறப்பம்சங்கள்
இந்த கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த கார்களின் முன்பதிவு அப்போதே 11 ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கியது.
இது சப் 4 மீட்டர் SUV கார்களான Renault Kwid, Nissan Magnite, Tata Punch, Citroen C3 ஆகிய கார்களுக்கு போட்டி போடும் என்பதால் இதன் விலை ரூ. 7 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Maruti Suzuki Fronx காரின் சிறப்பம்சங்கள்:
இந்த கார் பலேனோ சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் அதே போல் 9.0 Inch Touch Screen Infotainment System, HUD Display, ARkamys Sound System, Wireless Android Auto, Apple Car Play, Connected Car Technology, Climate Control, Type-C Charger போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் காரின் முன்பக்கம் டிசைன் பொறுத்த வரை கிராண்ட் விட்டாரா காரை போலவே LED Head Lamp, DRLS, Grille போன்றவை உள்ளன. 16 Inch Alloy Wheel, Slope Roof Line, Plastic Body Cladding, LED Tail Light, LED Strip போன்றவையும் உள்ளன.
இந்த காரில் 1.2 liter Mild Hybrid Engine உள்ளது. இதன் பவர் 88.8BHP ஆகும். இந்த காரில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் Optional AMT வசதிகளும் உள்ளது. மேலும் புதிய 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வசதியும் இடம் பெற்றுள்ளது. இதன் பவர் 98 BHP மற்றும் டார்க் 148 NM ஆகும்.
மேலும் இதில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் AMT உள்ளது.
காரின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்:
இந்த காரில் பாதுகாப்பிற்காக Dual airbags, ABS, EBD, ISOFIX Child Seat Mount போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 360 Degree Camera, Side Air Bag, Hill Hold Assist மற்றும் Reverse Parking Sensor போன்ற தொழிநுட்ப வசதிகள் உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023-ல் புதிதாக வந்திருக்கும் Toyota Innova Hycross கார் பற்றிய தகவல்
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |